Published:Updated:

புத்தாண்டு அன்று பிறந்த குழந்தைகள்... சீனாவை முந்திய இந்தியா..! #VikatanInfographics

உலகம் முழுவதிலும் ஜனவரி 1-ம் தேதி அன்று 3,92,078 குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் இந்தியாவில் பிறந்தவை, 67,385.

புத்தாண்டு  அன்று பிறந்த குழந்தைகள்
புத்தாண்டு  அன்று பிறந்த குழந்தைகள்

ஒவ்வொரு நாளும் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை உலகத் தரவு ஆய்வகம் என்ற அமைப்பு சேகரித்து ஆவணப்படுத்துகிறது. அதன் அடிப்படையில், ஒவ்வோராண்டும் புத்தாண்டு அன்று உலகம் முழுவதிலும் பிறக்கும் குழந்தைகள் பற்றிய விவரங்களை யுனிசெஃப் வெளியிடும்.

கொண்டாட்டத்தால் சிவந்த சிட்னி... காட்டுத்தீயால் சிவந்த மல்லக்கூட்டா... இது, ஆஸ்திரேலிய புத்தாண்டு!

இந்தாண்டும் புத்தாண்டு அன்று பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையை நாடுகள் வாரியாக வரிசைப்படுத்தியுள்ளது யுனிசெஃப். அதன்படி, உலகளவில் புத்தாண்டு அன்று இந்தியாவில்தான் அதிகமான குழந்தைகள் பிறந்துள்ளன. புத்தாண்டு அன்று பிறந்தவர்களில் 17 சதவிகிதம் குழந்தைகள் இந்தியாவில்தான் பிறந்துள்ளன.

2027-ம் ஆண்டுக்குள் இந்தியா, சீனாவை முந்தி உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மாறும் என்று கடந்தாண்டு ஐ.நா உலக மக்கள்தொகை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதை உண்மையாக்கும் வகையில் தற்போது இந்தத் தகவல் வெளிவந்துள்ளது.

அதிக மக்கள் தொகை
அதிக மக்கள் தொகை

உலகம் முழுவதிலும் ஜனவரி 1-ம் தேதி அன்று 3,92,078 குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் இந்தியாவில் பிறந்தவை, 67,385. இந்தியாவைத் தொடர்ந்து, சீனாவில் 46,299 குழந்தைகளும், நைஜீரியாவில் 26,039 குழந்தைகளும் பிறந்துள்ளன.

புத்தாண்டு அன்று அதிக குழந்தைகள் பிறந்த முதல் மற்றும் கடைசி பத்து நாடுகளின் பட்டியலைப் பின்வரும் படத்தில் காணலாம்.

முதல் பத்து நாடுகளின் பட்டியல்
முதல் பத்து நாடுகளின் பட்டியல்
கடைசி பத்து நாடுகளின் பட்டியல்
கடைசி பத்து நாடுகளின் பட்டியல்
இந்த ஆண்டின் முதல் குழந்தை பிஜி நாட்டில் பிறந்துள்ளது. புத்தாண்டு தினத்தின் கடைசி குழந்தை அமெரிக்காவில் பிறந்துள்ளது.
ஐ.நா.

ஐரோப்பிய நாடுகளில் குழந்தை பிறப்பு விகிதம் மிகக் குறைவாக உள்ளது. உலகளவில் புத்தாண்டு அன்று அரூபா நாட்டில் இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளன. அதைத் தொடர்ந்து சீசெல்ஸ் நாட்டில் மூன்று குழந்தைகளும், வெர்ஜின் தீவுகளில் மூன்று குழந்தைகளும் பிறந்துள்ளன.

2018-ம் ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் 25 லட்சம் குழந்தைகள் பிறந்த ஒரே மாதத்தில் இறந்துள்ளதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது. இதில், பெரும்பாலான குழந்தைகள்  தொற்று நோய், சிக்கலான பிரசவம் மற்றும் குறைப் பிரசவம் போன்ற காரணங்களால் உயிரிழந்ததுள்ளன. இதில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் பிறந்த முதல் நாளே இறந்துள்ளதும் அந்த அறிக்கையில் தெரியவந்துள்ளது.

2018-ம் ஆண்டு 25 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் இறந்தே பிறந்துள்ளன.
ஐ.நா.

முன்பைவிட குழந்தைகளின் இறப்பு விகிதம் 47 விழுக்காடு குறைந்துள்ளது. இதற்கு மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம்தான் காரணம் என்றும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

கடந்த முப்பது ஆண்டுகளில் குழந்தைகளின் உயிர்வாழ்வு உலகளவில் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

குழந்தை பராமரிப்பு
குழந்தை பராமரிப்பு

தங்களின் ஐந்தாவது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கு முன்பே இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை முன்பைவிட தற்பொழுது வெகுவாக குறைத்துள்ளது. ஆனால், புதிதாய் பிறக்கும் குழந்தைகளின் இறப்பு விகிதம் மிகமெதுவாகவே குறைந்து வருகிறது என்று யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

புத்தாண்டு பிறந்தாச்சு மக்களே... வீட்டு பட்ஜெட் போட்டாச்சா? #2020NewYear

இந்த அறிக்கை குறித்துப் பேசியுள்ள யுனிசெஃப் நிர்வாக இயக்குநர் ஹென்ரிட்டா போர், ``ஒவ்வொரு புதிய ஆண்டும் ஒரு புதிய சகாப்தத்தின் ஆரம்பம். நம் நம்பிக்கை நம் எதிர்காலத்தை மட்டுமல்லாது, நமக்குப் பின்னால் வருபவர்களின் எதிர்காலத்தையும் பிரதிபலிக்கும் வாய்ப்பாகும். ஒவ்வோர் ஆண்டு ஜனவரியிலும் நாம் காலண்டரை புரட்டும்போது, ஒவ்வொரு குழந்தையும் அவர்களின் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்குவதற்கான அனைத்து சாத்தியங்களும் நமக்கு நினைவூட்டப்படுகின்றன. அவர்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்" என்றார்.