Published:Updated:

India-China Face-off: `38,000 ச.கி.மீ ஆக்கிரமிப்பு; எந்தச் சூழலுக்கும் தயார்!’ - ராஜ்நாத் சிங்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ( LSTV )

இந்திய எல்லைக்குள் 38,000 சதுர கி.மீ பரப்பளவை சீனா ஆக்கிரமித்திருப்பதாகவும், மேலும் 90,000 சதுர கி.மீ பகுதியைத் தங்கள் ஆளுகைக்குட்பட்டதாகக் கருதுவதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

யூனியன் பிரதேசமான லடாக்கின் கிழக்குப் பகுதியிலுள்ள எல்லையில், இந்தியாவுக்குச் சொந்தமான பகுதிகளில் சீனா அத்துமீறி வருகிறது. டோக்லாம் தொடங்கி கல்வான் பள்ளத்தாக்கு மோதல் வரை பல்வேறு இடங்களில் சீனாவின் அத்துமீறலை இந்தியா தொடர்ந்து முறியடித்துவருகிறது. கிழக்கு லடாக்கின் பாங்கோங் சோ ஏரிப் பகுதியில் சீன வீரர்களின் அத்துமீறலை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்ததுடன், அந்த ஏரியைச் சுற்றியுள்ள முக்கியமான பகுதிகளையும் கைப்பற்றியது.

இது தொடர்பாக மாஸ்கோவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின்போது இரு நாட்டு பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பின்போது எல்லையில் படைகளைத் திரும்பப் பெறுவது தொடர்பான ஐந்து அம்சக் கொள்கைகளுடன்கூடிய முன்னெடுப்புக்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.

கல்வான் பள்ளத்தாக்கு
கல்வான் பள்ளத்தாக்கு
AP

இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ``எல்லையில் நிலவும் அமைதியைக் குலைக்கும் வகையில் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் சீனா நடந்துகொண்டது. அதற்கு இந்திய ராணுவமும் உரிய பதிலடி கொடுத்தது. `இது போன்ற சம்பவங்களை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று சீனாவிடம் நாம் தெரிவித்துவிட்டோம். இருப்பினும் எல்லைப்பகுதிகளில் சீனா தொடர்ந்து அத்துமீறல் சம்பவங்களில் ஈடுபட்டுவருகிறது.

Pangong Tso: `பாங்கோங் சோ ஏரி இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?' - சீன ஊடுருவல் முறியடிக்கப்பட்ட பின்னணி!

யூனியன் பிரதேசமான லடாக்கில் 38,000 சதுர கி.மீ பகுதியை சீனா ஆக்கிரமித்திருக்கிறது. அதேபோல், அருணாச்சலப்பிரதேசத்தில் இந்தியா - சீனா எல்லைப்பகுதியின் கிழக்குப் பகுதியிலுள்ள 90,000 சதுர கி.மீ பகுதியை சொந்தம் கொண்டாடிவருகிறது. இதற்கு ஆதாரமாக 1993-ம் ஆண்டு கையொப்பமான சீனா-பாகிஸ்தான் உடன்படிக்கையை அந்த நாடு சொல்லிவருகிறது. ஆனால், அந்தப் பகுதிகள் நம்முடைய ஆளுகைக்குட்பட்டவை. இந்தியா - சீனா இடையிலான பாரம்பர்ய எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதி தொடர்பான ஆவணங்களை ஏற்க சீனா தொடர்ந்து மறுத்துவருகிறது.

பாங்கோங் சோ ஏரி
பாங்கோங் சோ ஏரி
AP

இரு நாடுகளுக்கு இடையே 1950-ம் ஆண்டு தொடங்கி கையொப்பமான பல்வேறு உடன்படிக்கைகள், வரலாற்றுபூர்வமான ஆதாரங்கள் ஆகியவற்றைக் காட்டியும் சீனா அதை ஏற்க மறுக்கிறது. அதனால், இரு நாடுகளும் ஒப்புக்கொண்ட பொதுவான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு என்பது இதுவரையில் இல்லை. அதனால், இரு நாட்டு எல்லைப் பகுதிகளில் குறிப்பாக எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதிகளில் அமைதி தொடரவே தொடர்ச்சியான பேச்சுவார்த்தை, உடன்படிக்கை போன்றவை ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றன. இருப்பினும், சீன எல்லைப்பகுதியில் இதுவரை அமைதி திரும்பவில்லை. பிரச்னை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`15,000 அடி உயரத்தில் டென்ட்; விதிமீறிய சீனா!- கல்வான் பள்ளத்தாக்கு மோதலின் தொடக்கப்புள்ளி?

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் சில பகுதிகளில் நமது ஆளுகைக்குட்பட்ட பகுதிகளை சீனா தொடர்ந்து உரிமை கோரிவருகிறது. மே மாதத் தொடக்கத்தில் கல்வான் பகுதியில் வழக்கமாக நமது ராணுவம் ரோந்து சென்றுவந்த சில பகுதிகளைத் தங்களுடையது என சீனா தெரிவித்தது. அத்துடன், அந்தப் பகுதிகளில் ராணுவ துருப்புகளைக் குவிக்கத் தொடங்கியது. இதனாலேயே கல்வான் பள்ளத்தாக்கு மோதல் சம்பவம் நடைபெற்றது.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

கோங்கா லா, கோக்ரா மற்றும் பாங்கோங் சோ ஏரியின் வடக்குக் கரைப் பகுதிகளில் சீன ராணுவத்தின் நடவடிக்கைகளை முன்கூட்டியே கணித்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் இந்திய ராணுவம் அந்தப் பகுதிகளில் அசம்பாவிதங்களைத் தவிர்த்து, சீனாவின் அத்துமீறலை முறியடித்தது. சீனாவின் தற்போதைய நடவடிக்கைகள், இரு நாட்டு ஒப்பந்தங்களையும் உடன்படிக்கைகளையும் மீறுவதாக இருக்கிறது.

`Establishment 22' :  சீனாவுக்குப் பதிலடி தந்த இந்திய ரகசியப் படை பற்றித் தெரியுமா?

இருப்பினும், எல்லையில் நமது ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் சீனாவின் அத்துமீறலை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். சீன அத்துமீறலுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும். எல்லைப் பகுதியில் கடினமான சூழலில் வீரர்கள் இந்திய எல்லையைப் பாதுகாத்துவருகிறார்கள்.

இந்திய ராணுவம்
இந்திய ராணுவம்
AP | Mukhtar Khan

எல்லைப் பிரச்னை முழுமையாகத் தீர்க்கப்படாத நிலையில், எந்தச் சூழலையும் சமாளிக்கும் வகையில் ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகள் தயார்நிலையில் இருக்கின்றன’’ என்று ராஜ்நாத் சிங் பேசினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு