Published:Updated:

`குறுகிய மனப்பான்மை இருக்காது என நம்புகிறோம்!’-இந்தியாவுக்கு சீனாவின் கோரிக்கை #Corona

இந்தியா- சீனா
இந்தியா- சீனா

சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர், இந்தியாவில் கொரோனா பரவலைத் தடுக்க சீனா உதவும் என நம்பிக்கை அளித்தார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 21 நாள்கள் லாக்- டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவைகளின்றி மக்கள் சாலையில் சுற்றித் திரிந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளன. மருத்துவமனைகள், மருந்தகங்கள், அத்தியாவசியப் பொருள்கள் விற்கும் கடைகளைத் தவிர்த்து மற்ற கடைகள், நிறுவனங்கள் அனைத்தும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவன ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தே பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவை மற்றும் அரசு ஊழியர்களின் பயணத்துக்கு மிக சொற்பப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Corona
Corona

இந்த நிலையில் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர் இந்தியாவில் கொரோனா பரவலைத் தடுக்க சீனா உதவும் என நம்பிக்கை அளித்தார்.

மேலும் அவர், இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாகப் பேசும்போது, அது `சீன வைரஸ்’ என்று குறிப்பிடக்கூடாது எனக் கேட்டுக்கொண்டார். அது தங்கள் நாட்டுக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகத் தெரிவித்தார். இந்தியா அத்தகைய குறுகிய மனப்பான்மையுடன் கொரோனா வைரஸை அணுகாது எனத் தான் நம்புவதாகத் தெரிவித்தார்.

'Formula One' - அடுத்த 21 நாட்கள் ஒவ்வொரு வீட்டிலும் பின்பற்ற வேண்டிய கட்டாய விதி! #21dayslockdown

`கொரோனா வைரஸ் விவகாரத்தில், இந்தியா ஒருபோதும் அதை சீனா வைரஸ் எனக் குறிப்பிடாது' என ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளார். மேலும், `ஒட்டுமொத்த உலகமும் ஒன்றாகப் போராட வேண்டிய காலகட்டம் இது' எனவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பலமுறை கொரோனா வைரஸை, `சீன வைரஸ்’ எனக் குறிப்பிட்டுள்ளார். பல ஆங்கில ஊடகங்களும் அவ்வாறு குறிப்பிட்டு வந்தன. இதை சீனா பலமுறை கண்டித்திருக்கிறது.

ஜெய்சங்கர்
ஜெய்சங்கர்
`கொரோனா வைரஸ் வருது... தள்ளி நில்!' - கிண்டலடித்த தொழிலாளிக்கு ஊட்டியில் நேர்ந்த கொடூரம்

சீனா, கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து சற்று மீண்டு வந்த பிறகு, `சீன வைரஸ்’ எனக் குறிப்பிட்ட பலர் மீது வழக்கு தொடுத்துள்ளது. மேலும் உலக அளவில் ஒரு பிரசாரத்தை முன்னெடுத்தது. அதாவது `கொரோனா வைரஸ் முதன்முதலாகக் கண்டிபிடிக்கப்பட்டது சீனாவில் இருக்கலாம். ஆனால், அது சீனாவிலிருந்து உருவான வைரஸ் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்ற பிரசாரத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

முன்னதாகச் செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர், ``அமெரிக்காவில் சில தனிநபர்கள் வேண்டுமென்றே கொரோனா வைரஸை சீனாவுடன் இணைத்துப் பேசுகிறார்கள். தொடர்ந்து சீனாவுக்குக் களங்கம் விளைவிக்கிறார்கள். சீன மக்கள் இதைக் கடுமையாகவும் உறுதியாகவும் எதிர்க்கின்றனர். உலக சுகாதார நிறுவனமும் சீனாவுடன் வைரஸ்களை இணைப்பதை தெளிவாக எதிர்க்கிறது” என்று பேசியிருந்தார்.

அடுத்த கட்டுரைக்கு