Published:Updated:

India-China Face-Off:`மே மாதம் முதலே பதற்றம்... காரணம் சீனா!' -இந்திய வெளியுறவுத்துறை

கல்வான் பள்ளத்தாக்கு
கல்வான் பள்ளத்தாக்கு ( AP )

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மோதலுக்கு சீனாவே காரணம் என இந்தியா கடுமையாக குற்றம்சாட்டியுள்ளது.

இந்தியா சீனா இடையேயான கல்வான் பள்ளத்தாக்கு மோதல், சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவும் சீனாவும் இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என பல்வேறு நாடுகளும் அமைப்புகளும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது.

இந்தியா - சீனா
இந்தியா - சீனா
AP

இரு நாடுகளும் பல்வேறு கட்டங்களில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகிறார்கள். ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் எல்லையில் பதற்றத்தைக் குறைக்க நடந்து வரும் நிலையில், ரஷ்யா இந்த விவகாரத்தில் தலையிட்டு இந்தியா - சீனா ஆகிய நாடுகளுடன் அமைச்சர்கள் கட்டத்திலான முத்தரப்பு பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டது.

இந்திய, சீன ராணுவ தரப்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சீனா தனது படைகளை பின்வாங்க சம்மதம் தெரிவித்தது. இந்த நிலையில், இன்று மதியம் பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்பாட்டை ஏற்று சீனா எல்லைப் பகுதியிலிருந்து பின்வாங்கியதாக செய்திகள் வெளியாயின. இதனால் எல்லையின் பதற்றம் குறையும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

இந்தியா - சீனா
இந்தியா - சீனா

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா, ``மே மாதம் தொடக்கம் முதலே சீனா, மிகப்பெரிய அளவில் எல்லையில் படைகளைக் குவித்து பதற்றத்தை அதிகரித்தது. ஏற்கெனவே போடப்பட்டிருந்த ஒப்பந்தங்களை அது மீறுவதாக இருந்தது, அவர்கள் படைகளை குவித்ததன் காரணமாகவே இந்தியாவும் படைகளைக் குவிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதுவே மோதலுக்கு காரணமாகவும் அமைந்தது” என்றார்.

India-China FaceOff:`இந்திய-சீன எல்லை விவகாரத்தில் ரஷ்யா!’ -தீர்வு கிடைக்குமா?

கடந்த 20-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் சீனா தான் பதற்றத்துக்கு காரணம் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் அந்தப் பதற்றம் காரணமாகவே ஜூன் மாதம் மோதல் நடைபெற்றது எனவும் இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

``மே மாதம் தொடக்கத்தில் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவத்தின் வழக்கமான ரோந்துப் பணிகளை சீனா தடுத்தது. விதிமுறைகளின்படி வழக்கமான ரோந்துகளைதான் மேற்கோள்கிறோம் என சீனாவிடம் தெரிவித்தோம்” என்று இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியா - சீனா எல்லை
இந்தியா - சீனா எல்லை

இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக பேசிய சீன தூதர், ``சீனாவும் இந்தியாவும் வேறுபாடுகளை நிர்வாக ரீதியாக களைய தயாராக உள்ளன. எல்லைப் பகுதிகளில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை கூட்டாக நிலைநிறுத்துவதற்கும், உறவுகளின் சீரான வளர்ச்சியை உறுதி செய்வதற்கும் சீனா இந்தியாவுடன் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளது” என்று தெரிவித்தார்.

India-China Face-Off: `ஷாவ்மி விற்பனையில் பாதிப்பா...' -என்ன சொல்கிறது Mi India?
அடுத்த கட்டுரைக்கு