Published:Updated:

'Xiaomi' நிறுவனத்தின் இந்தியத் தலைவர் நேரில் ஆஜராக வேண்டும்- அமலாக்க இயக்குநரகம் நோட்டீஸ்!

மனு குமார் ஜெயின்

இந்திய சியோமி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மனு குமார் ஜெயின் (Manu Kumar Jain), சியோமி நிறுவனத்தின் வணிக நடைமுறைகள் தொடர்பான விசாரணையில் ஆஜராகுமாறு இந்திய அமலாக்க இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

'Xiaomi' நிறுவனத்தின் இந்தியத் தலைவர் நேரில் ஆஜராக வேண்டும்- அமலாக்க இயக்குநரகம் நோட்டீஸ்!

இந்திய சியோமி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மனு குமார் ஜெயின் (Manu Kumar Jain), சியோமி நிறுவனத்தின் வணிக நடைமுறைகள் தொடர்பான விசாரணையில் ஆஜராகுமாறு இந்திய அமலாக்க இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Published:Updated:
மனு குமார் ஜெயின்

இந்தியாவின் ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொடி கட்டிப் பறந்த நிறுவனம் சியோமி (Xiaomi). இந்நிறுவனம் ஸ்மார்ட் வாட்ச்கள், தொலைக்காட்சிகள் உட்பட பல தொழில்நுட்ப கேஜெட்களையும் உற்பத்தி செய்துவருகிறது.

இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பரில் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டின் பேரில் சியோமி மற்றும் சில சீன மொபைல் தயாரிப்பு நிறுவனங்களின் வளாகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக சியோமிக்கு சொந்தமான சில ஸ்மார்ட்போன் பயன்பாடுகளையும் அரசாங்கம் தடை செய்திருந்தது.

தற்போது இது தொடர்பான விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் செயல்பட்டு வந்த சியோமி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மனு குமார் ஜெயின் (Manu Kumar Jain), சியோமி நிறுவனத்தின் வணிக நடைமுறைகள் தொடர்பான விசாரணையில் ஆஜராகுமாறு இந்திய அமலாக்க இயக்குநரகம் (ED) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் நேரில் ஆஜராவதன் மூலமோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி மூலமாகவோ நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட உரிய நிதி ஆவணங்களை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மனு குமார் ஜெயின்
மனு குமார் ஜெயின்

இது தொடர்பாக பதிலளித்துள்ள சியோமி (Xiaomi) நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், 'நாங்கள் நாட்டின் சட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். நாங்கள் அனைத்து விதிமுறைகளுக்கும் முழுமையாக இணங்குகிறோம், அதே போல் நம்பிக்கையுடனும் இருக்கிறோம். தேவையான அனைத்து தகவல்களும் ஆவணங்களும் இருப்பதை உறுதிசெய்யும் விசாரணைக்கு நாங்கள் ஒத்துழைக்கிறோம்' என்று கூறியுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism