Published:Updated:

இலங்கை வந்தடைந்த சீன உளவுக் கப்பல்... ராமேஸ்வரம் பகுதியில் ஹெலிகாப்டர் மூலம் கண்காணிப்பு ஒத்திகை!

இலங்கையில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் சீன உளவுக் கப்பல்

சீன உளவுக் கப்பல் இலங்கை வந்தடைந்ததைத் தொடர்ந்து ராமேஸ்வரம் கடற்கரைப் பகுதியில் கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுவருகிறது.

இந்திய-இலங்கை சர்வதேச கடல் எல்லைப் பகுதிக்கு ராமேஸ்வரம் மிக அருகாமையில் இருப்பதால் அந்நிய ஊடுருவல், போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களைத் தடுக்கும்விதமாகவும், அகதிகள் வருகை உள்ளிட்டவற்றைக் கண்காணிப்பதற்காகவும் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படை அதிகாரிகள் ராமேஸ்வரம் தீவுப் பகுதியைச் சுற்றியுள்ள கடற்கரைப் பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

சீன உளவுக் கப்பல்
சீன உளவுக் கப்பல்

இந்நிலையில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரை, மீன்பிடித் துறைமுகம், தனுஷ்கோடி, அரிச்சல் முனை, பாம்பன், மண்டபம் உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் உச்சிபுளி ஐ.என்.எஸ் பருந்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் மற்றும் ரோந்துக் கப்பல்கள் மூலம் திடீர் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. ஹெலிகாப்டரிலிருந்து கடற்படை வீரர்கள் கயிறு மூலம் கடலில் இறங்கி, தாழ்வாகப் பறந்து கண்காணிப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ராமேஸ்வரம் கடற்பரப்பில் ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பு ஒத்திகை
ராமேஸ்வரம் கடற்பரப்பில் ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பு ஒத்திகை

இது குறித்து கடலோர காவல் படை அதிகாரிகளிடம் பேசியபோது, ``இந்தியாவின் எதிர்ப்பை மீறியும் இலங்கை கடற்பரப்பில் சீன உளவுக் கப்பல் வந்தடைந்திருக்கிறது. ராமேஸ்வரத்திலிருந்து இலங்கை மிக அருகில் இருப்பதால், இங்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுவருகிறது. சீனக் கப்பல் இலங்கையிலிருந்து கிளம்பும் வரை ராமேஸ்வரம் கடற்பரப்புப் பகுதியில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்புப் பணியை மேற்கொள்ள உளவுத்துறை அறிவுறுத்தியிருக்கிறது. அதற்காக இந்திய கடற்படை, கடலோர காவல் படை, ஐ.என்.எஸ் பருந்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பு ஒத்திகை செய்யப்படுகிறது” எனத் தெரிவித்தனர்.