Published:Updated:

நடிக்காத... எழுந்து நில்- மாற்றுத்திறனாளி பெண்ணிடம் கடுமையாக நடந்துகொண்ட பெண் காவலர்

ராம் பிரசாத்

டெல்லி விமானநிலையத்தில், மத்திய தொழில் பாதுகாப்புப் படை காவலர்களால், மாற்றுத்திறனாளி ஒருவர் மனம் வேதனைப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

Virali Modi
Virali Modi

டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில் இருந்து ஸ்பைஸ் ஜெட் மூலம் மும்பை புறப்பட தயாரானார். தன்னால் நடக்கமுடியாது என்ற காரணத்தால், விமான நிலைய அதிகாரிகளிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். அவர்களும் உடனடியாக வீல் சேரை ஏற்பாடுசெய்து கொடுத்துள்ளனர். உதவிக்கு ஒரு நபரையும் அனுப்பியுள்ளனர். எந்த சங்கடமும் இல்லாமல் பாதுகாப்பு சோதனைக்காக வந்தார். ஆனால், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படை பெண் காவலர் ஒருவரின் செயலால், கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

Virali Modi
Virali Modi

'மாற்றுத்திறனாளிகளிடம் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என காவலர்களுக்குத் தெரியாதா' என்று ட்விட்டரில் கேள்வியெழுப்பியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, மத்திய தொழில் பாதுகாப்புப் படையினருக்கு புகார் தெரிவித்துள்ளார். அந்தப் புகாரில், “எனது பெயர் விராலி மோடி, அமெரிக்க குடியுரிமை வைத்துள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவள். கடந்த 13 வருடங்களுக்கு முன்பு நடந்த விபத்தால் என்னால் நடக்கவோ, எழுந்து நிற்கவோ முடியாது. 09-09-19 அன்று இந்திரா காந்தி விமானநிலையத்துக்கு மும்பை செல்வதற்காக வந்தேன். எனது இயலாமை காரணமாக சொந்தமாக வீல் சேர் வைத்துள்ளேன். விதிமுறைகளின்படி எனது சக்கர நாற்காலியை கார்கோ கவுன்டரில் சமர்ப்பிக்கக் கூறினர். மேலும், விமானத்தை அடையவும் பிற பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொள்ளவும் ஒரு போர்ட்டரை நியமித்தனர். பாதுகாப்பு நடைமுறைகளுக்காகச் செல்லும்போது, பெண் பாதுகாப்பு அதிகாரியால் மோசமான அனுபவம் ஏற்பட்டது.

`கோத்ரா கலவரத்தின் முகங்கள்!' - இப்போது எப்படி இருக்கிறார்கள் தெரியுமா?

அவர், என்னை எழுந்துநிற்க கட்டாயப்படுத்தினார். நானும் என்னுடன் வந்தவரும் எனது நிலைமையை எவ்வளவோ எடுத்துக்கூறியும் அவர் கேட்பதாக இல்லை. எனது பாஸ்போர்ட்டையும் அவர் பார்க்க மறுத்துவிட்டார். 'நீ எழுந்திருக்கவில்லை என்றால், என்னால் எப்படி சோதனை செய்ய முடியும். உன்னால் எழுந்திருக்க முடியும், எழுந்து நில்' என்றார். நான் முடியாது என மறுத்துவிட்டேன். அவர் உடனே, அங்கிருந்த சக காவலரிடம் 'இந்தப் பெண் நன்றாக நடிக்கிறாள். தேவையே இல்லாமல் நம்மிடம் நடித்துக்கொண்டிருக்கிறாள்' என்றார். அந்த அதிகாரியும் நான் கூறுவதை செவிகொடுத்து கேட்பதாக இல்லை. அவரது பெயர் எனக்குத் தெரியவில்லை. அவர் பெயரை என்னால் பார்க்க முடியவில்லை. இறுதியில், ஒரு மூத்த அதிகாரி வந்து, என்னை சோதனைசெய்து அனுப்பி வைத்தார்.

Virali Modi
Virali Modi

''மாற்றுத்திறனாளிகளிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் எனக் காவலர்களுக்கு நீங்கள் சொல்லிக்கொடுக்க வில்லையா? இந்த அரசாங்கத்தை நினைத்து வெட்கப்படுகிறேன். இதுபோன்ற சம்பவங்கள் இனி வரும் காலங்களில் நடக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். இந்தப் புகாருடன் எனது போர்டிங் பாஸ், இ-டிக்கெட், பாஸ்போர்ட் மற்றும் என்னுடைய புகைப்படத்தை அனுப்பியுள்ளேன்'' என அதில் தெரிவித்துள்ளார். இந்தப் புகார் மனுவை ட்விட்டரில் பதிவேற்றியுள்ளார். இவருக்கு ஆதரவாகப் பலரும் தங்களது கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர்.

மற்றொரு பதிவில், டெல்லியில் இருக்கும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை தலைமை அலுவலகத்தில் இருந்து தன்னைத் தொடர்புகொண்டதாகப் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், டெல்லியில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்புப் படை தலைவர் அழைப்பு விடுத்து, நிலைமைகுறித்து தனது வருத்தத்தைத் தெரிவித்ததோடு, மன்னிப்பு கோரினார். நான் அடுத்த முறை டெல்லி வரும்போது, அவரை சந்திக்கும்படி கூறியிருந்தார் ” என்று பதிவிட்டுள்ளார்.