Published:Updated:

`அமேஸானில் ஆர்டர் செய்ததோ மவுத்வாஷ்... கிடைத்ததோ `ரெட்மி நோட் 10’ - மும்பைவாசி பகிர்ந்த சுவாரஸ்யம்

அமேஸானில் கிடைத்த போன்
அமேஸானில் கிடைத்த போன்

அமேஸானில் மவுத்வாஷ் ஆர்டர் செய்த மும்பை வாலிபருக்கு ரெட்மி நோட் 10 மொபைல்போன் கிடைத்துள்ளது. தற்போது அந்த போனை பயன்படுத்துவதா அல்லது திருப்பிக் கொடுக்க வைத்திருப்பதா என்று தெரியாமல் இருக்கிறாராம்.

ஆன்லைனில் பொருள்களை ஆர்டர் செய்பவர்களுக்குச் சில நேரம் அதிர்ஷ்டம் கைகொடுக்கும். அதேசமயம் மொபைல்போன் ஆர்டர் செய்தவருக்கு செங்கல் வந்த சம்பவங்களும் நடப்பதுண்டு. மும்பையில் அது போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. மும்பையைச் சேர்ந்த லோகேஷ் என்ற வாலிபர் அமேஸானில் நான்கு கோல்கேட் மவுத்வாஷ் பாட்டில் ஆர்டர் செய்திருந்தார். ஆனால் அவரது அதிர்ஷ்டம் அவருக்கு அமேஸானிலிருந்து வந்த பார்சலைப் பிரித்துப் பார்த்தபோது உள்ளே `ரெட்மி நோட் 10’ மொபைல்போன் இருந்தது.

அமேஸான்
அமேஸான்

மகாராஷ்டிராவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதால், மொபைல்போன் போன்ற எலக்ட்ரானிக் பொருள்களை ஆன்லைனில் ஆர்டர் செய்ய முடியாது. அத்தியாவசிய பயன்பாட்டுப் பொருள்களை மட்டுமே ஆன்லைனில் வாங்க முடியும். ஆனால் அமேஸான் நிறுவனம் விதிகளை மீறி, அதுவும் கோல்கேட் மவுத்வாஷ் கேட்ட வாடிக்கையாளருக்கு மொபைல்போனை அனுப்பிவைத்து இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

கோலேஷ் என்பவர் இது தொடர்பாக சமூக வலைதளத்தில் செய்தியைப் பதிவிட்டுள்ளார். அவர் மொத்தம் ரூ.396 மதிப்புள்ள பொருள்களை மட்டுமே ஆர்டர் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவருக்குக் கிடைத்த மொபைல்போன் மதிப்பு ரூ.13,000. தனக்குக் கிடைத்த மொபைல்போனையும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்திருக்கிறார். அந்த மொபைல்போனை திருப்பி அனுப்ப, மொபைல்ஆப்பில் கோரிக்கை மனுவையும் தன்னால் அனுப்ப முடியவில்லை என்று கோலேஷ் தெரிவித்துள்ளார். இன்வாய்ஸில் வேறு ஒருவரின் முகவரி இருந்தது. அதாவது தெலங்கானாவுக்குச் செல்ல வேண்டிய மொபைல்போன் வழிதவறி மும்பைக்கு வந்துவிட்டது. ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் பார்ட்னர்கள் கவனக்குறைவாக இது போன்று வேறு பொருள்களை அனுப்பிவைத்துவிடும் சம்பவங்கள் நடந்துவிடுவதுண்டு. தற்போது அந்த போனை பயன்படுத்துவதா அல்லது திருப்பிக் கொடுக்க வைத்திருப்பதா என்று தெரியாமல் இருக்கிறாராம் கோலேஷ்.

அடுத்த கட்டுரைக்கு