Published:Updated:

`நம்மால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிகிறது!’ - கேரள வெள்ளம் குறித்து பினராயி வேதனை

சத்யா கோபாலன்

மலப்புரம் மாவட்டத்தில்தான் அதிகபட்சமாக 60 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Pinarayi Vijayan
Pinarayi Vijayan

`கடவுளின் தேசம்' என அழைக்கப்படும் கேரள மாநிலம் கடந்த வருடம் முதல் இயற்கை பேரிடரில் சிக்கித் தவித்துவருகிறது. சென்ற ஆண்டு பெய்த கன மழையால் கேரளா முழுவதும் வெள்ளத்தில் மிதந்தது. ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்து தவித்தனர். மேலும், 400-க்கும் அதிகமானவர்கள் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தனர்.

Kerala Flood
Kerala Flood

அந்த வெள்ளத்திலிருந்து தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்துள்ளனர் கேரள மக்கள். அதற்குள், தற்போது பெய்த தென்மேற்குப் பருவ மழை மீண்டும் அம்மாநிலத்தை மூழ்கடித்திருந்தது. கேரளாவின் பல இடங்களில் வெள்ளமும், நிலச்சரிவும் ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 70-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போய் அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சென்ற வருடத்தைவிட இந்த வருடம் பெய்த மழையால், கேரளா அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Kerala land slide
Kerala land slide

இந்த நிலையில், கேரளாவில் கட்டடங்கள் கட்டுவதற்கு கட்டுப்பாடுகள் விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன். `இந்த உலகில் அனைத்தை விடவும் மனித உயிர்கள்தான் மிக முக்கியமானவை. நம் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிப் பல மக்கள் உயிரிழந்துள்ளனர். நம்மால் எதுவும் செய்யமுடியாமல் மண்ணில் சிக்கியுள்ள உடல்களைத் தோண்டும் பணியை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

"உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடுகிறோம்"- கேரள வெள்ளத்தால் கண்ணீர்வடிக்கும் தாய்

நீர் நிலைகளின் ஓட்டத்தைத் தடுத்து வீடு கட்டியதன் விளைவைத் தான் தற்போது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இந்த வருடம் எந்த அணையும் திறக்காமலேயே பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் இனிமேல் எந்தக் கட்டடமும் கட்டக் கூடாது.

Kerala Flood
Kerala Flood

நிலச்சரிவில் தங்கள் வீட்டை இழந்து தற்போது முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு விரைவில் ஒரு தற்காலிக வீடு அமைத்துத்தரப்படும். மேலும், வேறு ஓர் இடத்தில் அரசு செலவில் புதிய வீடுகள் கட்டித்தரப்படும். முகாம்களில் வாழும் அனைத்து குடும்பத்துக்கும் உடனடி நிவாரணமாக ரூ,10,000 வழங்கப்படும்” என அறிவித்துள்ளார்.