Published:Updated:

கர்நாடகா: ஹிஜாப் அணிந்ததால் மாணவிகளுக்குத் தடை! - கல்லூரி சர்ச்சையில் நடந்தது என்ன?

ஹிஜாப்

கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் ஹிஜாப் அணிந்து வந்ததால், சில மாணவிகள் வகுப்புக்குள் நுழையத் தடை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் அங்கு சர்ச்சையை கிளப்பியிருக்கிறது!

கர்நாடகா: ஹிஜாப் அணிந்ததால் மாணவிகளுக்குத் தடை! - கல்லூரி சர்ச்சையில் நடந்தது என்ன?

கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் ஹிஜாப் அணிந்து வந்ததால், சில மாணவிகள் வகுப்புக்குள் நுழையத் தடை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் அங்கு சர்ச்சையை கிளப்பியிருக்கிறது!

Published:Updated:
ஹிஜாப்

சர்ச்சை என்ன?

கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் மாணவிகள் சிலர், கல்லூரி முதல்வர் ருத்ரே கவுடா உத்தரவுப்படி டிசம்பர் 27-ம் தேதி முதல் வகுப்புகளுக்குச் செல்லவில்லை என்றும், இவர்கள் கல்லூரி விதிகளை மீறி ஹிஜாப் அணிந்து வந்ததே இதற்குக் காரணம் எனவும் சொல்லப்பட்டது.

குறிப்பிட்ட கல்லூரியில் சுமார் 70 -க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மாணவிகள் படிக்கின்றனர். இதில் ஹிஜாப் அணிய அனுமதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துபவர்கள் 7-8 பேர் என்கிறார்கள் கல்லூரி நிர்வாகத்தினர். தங்கள் நிலைப்பாடு தனிப்பட்ட விருப்பம் என்று இவர்கள் கூறுகிறார்கள். "மற்ற பெண்கள் அதை அணிய விரும்பினால், அது அவர்களின் விருப்பம்" என்று ஒரு மாணவி கூறியுள்ளார்.

கர்நாடகா: ஹிஜாப் அணிந்ததால் மாணவிகளுக்குத் தடை! - கல்லூரி சர்ச்சையில் நடந்தது என்ன?

பெண்கள் கல்லூரியில் ஹிஜாப் அணிய வேண்டும் என்று மாணவிகள் ஏன் வற்புறுத்துகிறார்கள் என்ற கேள்விக்கு, ``இந்தக் கல்லூரியில் நிறைய ஆண் ஆசிரியர்கள் இருக்கிறார்கள், வெளியிலிருந்து நிறைய பேர் நிகழ்ச்சிகளுக்காக வளாகத்துக்குள் வருகிறார்கள்" என பதிலளித்துள்ளனர்.

``கல்லூரி விதியில் ஹிஜாப் அணியத் தடை செய்யும் விதி இருந்ததாக நினைத்திருந்தோம். அப்படி இல்லை என அறிந்த பிறகே ஹிஜாப் அணியத் தொடங்கினோம்” என்கிறார் மற்றொரு மாணவி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும், இதே கல்லூரியில் படித்த முன்னாள் மாணவிகள் வகுப்பறையில் ஹிஜாப் அணிந்திருப்பதாகவும் சிலர் கூறுகின்றனர். அது தொடர்பான புகைப்படங்கள் சில ஊடகங்களிலும் வெளியாகியுள்ளன. ஆனால் கல்லூரியின் 37 ஆண்டுக்கால வரலாற்றில் எந்த மாணவரும் வகுப்பறையில் ஹிஜாப் அணிந்ததில்லை என்று கூறி கல்லூரி அதிகாரிகள் இந்தக் கூற்றை மறுத்துள்ளனர்.

பேச்சுவார்த்தை:

கடந்த மூன்று வாரங்களாக, மாணவிகளின் பெற்றோருக்கும், கல்லூரி நிர்வாகத்துக்கும் இடையே பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும், பிரச்னைக்கு தீர்வுகாண முடியவில்லை.. ``இந்தப் பிரச்னை பகிரங்கமானதால் நாங்கள் கல்லூரி நிர்வாகத்துக்கு மன்னிப்பு கடிதம் எழுதவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது" என்று மாணவி ஒருவர் கூறுகிறார். இந்த விவகாரம் வெளியில் தெரியவந்ததிலிருந்து கல்லூரியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கல்வி நிலையம்
கல்வி நிலையம்
மாதிரிப்படம்

மாணவர்கள், இஸ்லாமிய மாணவர் அமைப்புகளான கேம்பஸ் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (சிஎஃப்ஐ) மற்றும் ஸ்டூடன்ட்ஸ் இஸ்லாமிய அமைப்பு (எஸ்ஐஓ) ஆதரவுடன் டிசம்பர் 30 அன்று உடுப்பி துணை ஆணையர் குர்மா ராவை அணுகி முறையிட்டனர். ஆனால் தங்கள் முறையீட்டின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறுகிறார்கள்.

``இந்தப் பிரச்னை முழுவதற்கும் நாங்கள் மாணவிகளுக்கு ஆதரவளித்து வருகிறோம், மேலும் அவர்கள் வகுப்பறைகளில் ஹிஜாப் அணிய அனுமதிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்" என்று உடுப்பியில் உள்ள கேம்பஸ் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் நசாத் அசாதி கூறுகிறார். பெற்றோருக்கும் நிர்வாகத்துக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை பலனளிக்காததால், முஸ்லிம் அமைப்புகளை அணுகியதாக மாணவிகள் கூறுகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வழக்கறிஞர்கள் குழுவான அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் (AILAJ) பெங்களூரில் உள்ள பல்கலைக்கழகக் கல்வித்துறைக்கு இந்தப் பிரச்னையைப் பற்றி கடிதம் எழுதியுள்ளது. அதில், `மாணவர்களின் மத அடையாளத்தைக் குறிவைப்பது இஸ்லாமிய வெறுப்பு மனநிலை’ என்று குறிப்பிட்டுள்ளது. ``இளம் இஸ்லாமிய மாணவர்களுக்குக் கல்வி மறுக்கப்படுவதும், கல்வி பெறுவதற்கும் அவர்களின் நம்பிக்கைக்கு இடையே தேர்வு செய்யும்படி அவர்களைக் கட்டாயப்படுத்துவதும் மனித உரிமைகள் பிரச்னையாகும்" என்று வழக்கறிஞர் கிளிஃப்டன் டி'ரொஜாரியோ கையொப்பமிட்ட AILAJ-வின் கடிதம் கூறுகிறது.

``அவர்கள் சீருடை அணிந்துள்ளனர். அவர்கள் சீருடையுடன் முக்காடு அணிந்தது கல்லூரி நிர்ணயித்த ஆடைக் குறியீட்டை மீறுவதுபோல் இல்லை" என்று பெங்களூரில் உள்ள வழக்கறிஞரும் AILAJ வின் இணை ஒருங்கிணைப்பாளருமான மைத்ரேயி கிருஷ்ணன் கூறுகிறார்.

கர்நாடகா: ஹிஜாப் அணிந்ததால் மாணவிகளுக்குத் தடை! - கல்லூரி சர்ச்சையில் நடந்தது என்ன?

போராட்டங்களுக்கிடையே, மாணவிகள் தங்கள் வகுப்புகளுக்குத் திரும்பி கல்வியைத் தொடர விரும்புவதாகக் கூறுகிறார்கள், குறிப்பாக தேர்வுகள் நெருங்கி வருகின்றன. ``வகுப்புகளைத் தொடர, நாங்கள் எங்கள் வகுப்பு தோழர்களிடம் குறிப்புகளைக் கேட்கிறோம். தேர்வுகளுக்குத் தயாராக விரும்புகிறோம்” என்கின்றனர்.

எதிர்ப்பு:

உடுப்பியில் நடந்த போராட்டத்தை எதிர்ப்பதுபோல, சிக்மகளூர் மற்றும் தட்சிண கன்னடா மாவட்டங்களில் உள்ள இரண்டு கல்லூரிகளில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) மாணவர்கள் கல்லூரிக்குள் காவித் துண்டு அணிந்து போராட்டம் நடத்தினர். இரு நிறுவனங்களிலும் உள்ள அதிகாரிகள் எதிர்ப்புகளுக்கு பதிலளிக்கும்விதமாக காவித் துண்டு மற்றும் ஹிஜாப்களை தடை செய்தனர்.

உடுப்பியில் உள்ள மகளிர் அரசுப் பல்கலைக்கழகத்தின் மாணவிகள், அந்த எதிர்ப்புப் போராட்டங்களுக்கும் தங்கள் கல்லூரியின் நிலைமைக்கும் சிறிதும் சம்பந்தம் இல்லை என்று கூறுகின்றனர். ``இந்து மதத்தில் காவி அணிவது கட்டாயம் என்றால், அவர்கள் அதை அணியட்டும். எங்கள் கலாசாரத்தில், ஹிஜாப் அணிய வேண்டும், ”என்று மாணவி ஒருவர் கூறுகிறார்.

நிர்வாகத் தரப்பு விளக்கம்:

கல்லூரி முதல்வர் ருத்ரே கவுடா, வகுப்பு நேரத்திலும் வகுப்பறைக்குள்ளும் மட்டும் ஹிஜாப் அணிவதை கல்லூரி அனுமதிப்பதில்லை என்று கூறியிருந்தார். இது வகுப்பறைக்குள் வேற்றுமைகள் இல்லாமல் இருக்க உறுதி செய்வதற்காக விதிக்கப்பட்டது என்றும் கூறினார்.

``கர்நாடக அரசு நடத்தும் கல்லூரிகளில் குறிப்பிட்ட ஆடைக் கட்டுப்பாடு எதுவும் இல்லை. ஆடைக் கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது தொடர்பான முடிவுகளை கல்லூரி அதிகாரிகள் அல்லது அவர்களின் கண்காணிப்புக் குழுக்கள் முடிவு செய்யும். வகுப்புகளின்போது மாணவர்கள் அணியவேண்டிய ஆடைகள் குறித்து கண்காணிப்புக் குழுக்கள் இறுதி முடிவை மேற்கொள்ள அனுமதிக்கப்படும்” என்று கர்நாடக கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ் தெரிவித்துள்ளார்.

கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் தொடர்ந்து கூறுகையில், ``1985-லிருந்து இதே விதிகள்தான் பின்பற்றப்படுகின்றன. இத்தனை ஆண்டுகளாக ஒரு பிரச்னையும் இல்லை. இது குறித்து மாநில அரசுடன் விவாதித்தோம், ஆனால் அரசுக் கல்லூரிகளில் ஆடைக் கட்டுப்பாடு கட்டாயம் என்ற சட்டம் இல்லை, நாங்கள் இது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை” என்று கூறியுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism