Published:Updated:

புதுச்சேரி: `கட்டுக்குள் வந்தது கொரோனா!’ -அரசு அலுவலகங்கள் 100% பணியாளர்களுடன் இயங்க உத்தரவு

புதுச்சேரி அரசு
புதுச்சேரி அரசு

புதுச்சேரியில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து, அனைத்து அரசு அலுவலகங்களும் 100% பணியாளர்களுடன் இயங்க வேண்டும் என்று புதுச்சேரி அரசு உத்தரவிட்டிருக்கிறது.

புதுச்சேரியில் தீவிரமெடுத்த கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்தில் உச்சம் தொட்டு, உயிரிழப்புகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியது. கொரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதலில் தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கை அமல்படுத்திய புதுச்சேரி அரசு, பகுதி நேர ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு போன்றவற்றை அமல்படுத்தியது.

புதுச்சேரி அரசு
புதுச்சேரி அரசு

அதன் ஒரு பகுதியாக ஏப்ரல் மாதம் 22-ம் தேதி முதல் குரூப் ‘பி’ மற்றும் குரூப் ‘சி’ ஊழியர்கள் 50% பேர் பணிக்கு வந்தால் போதுமானது என்று அறிவித்த நிர்வாக சீர்திருத்தத்துறை, குரூப் ‘ஏ’ அதிகாரிகள் அனைவரும் பணிக்கு வர வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. மறு உத்தரவு வரும்வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது புதுச்சேரியில் கொரோனா தொற்றின் தீவிரம் குறையத் தொடங்கியிருப்பதால், ஊரடங்குக் கட்டுப்பாடுகளையும் படிப்படியாக தளர்த்திவருகிறது புதுச்சேரி அரசு. இந்தநிலையில் அரசு சார்புச் செயலர் ஜெய்சங்கர் வெளியிட்டிடுக்கும் சுற்றறிக்கையில், ”குரூப் ‘பி’ மற்றும் ‘சி’ பிரிவு அதிகாரிகள் 50% பணிக்கு வந்தால் போதுமானது என்ற உத்தரவு நாளை 15-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.

புதுச்சேரி: `100% தடுப்பூசி; கொரோனா இல்லாத கிராமம்!’ - ஆளுநரிடம் சான்று பெற்ற புதுக்குப்பம்

16-ம் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் முழுப் பணியாளர்களுடன் இயங்கும். அனைத்து அலுவலகங்களிலும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதும் அவசியம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு