Published:Updated:

`2 நாள்களில் 2,000 தமிழர்கள் வெளியேற்றம்!' - கேரள அத்துமீறலால் பதற்றத்தில் வாளையார்

தமிழக கேரள எல்லை
தமிழக கேரள எல்லை

கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகக் கேரள எல்லையான வாளையாரில் கேரள அதிகாரிகள் அத்துமீறுவதாகப் புகார் எழுந்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழகத்தைச் சுற்றியுள்ள மாநில எல்லைகள் ஏற்கெனவே மூடப்பட்டுள்ளன. கோவை அருகே உள்ள தமிழக கேரள எல்லையான வாளையார் பகுதி கடந்த வாரமே மூடப்பட்டுவிட்டது.

தமிழக கேரள எல்லை
தமிழக கேரள எல்லை

அத்தியாவசிய தேவைக்கான வாகனங்கள், மருத்துவம் உட்பட அவசரத் தேவைக்கு வரும் வாகனங்கள் மட்டுமே தமிழகத்துக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கேரளாவில் இருக்கும் தமிழர்களை கேரள சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆம்புலன்ஸ் மூலம் வெளியேற்றுவதாகப் புகார் எழுந்துள்ளது.

இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலமாக கூட்டம், கூட்டமாக வந்த பாதிப்பு உள்ள மற்றும் பாதிப்பு இல்லாத மக்களை தமிழக அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதைத்தொடர்ந்து, பொய்யான தகவல்களை வழங்கி கேரள ஊடகங்கள் மற்றும் போலீஸாரை எல்லையில் குவித்துள்ளனர்.

தமிழக கேரள எல்லை
தமிழக கேரள எல்லை

மேலும், கேரள ஊடகங்களில் இது தொடர்பாக பொய்யான தகவல்களை ஒளிபரப்புவதாக தமிழக அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து வாளையார் எல்லையில் உள்ள தமிழக அதிகாரிகள் சிலர் கூறுகையில், “சோதனைச்சாவடியில் அனைத்து வாகனங்களையும் அனுமதிக்கக் கேரள அதிகாரிகள் அழுத்தம் கொடுக்கின்றனர். சுகாதாரத்துறையினர் பணி செய்யவிடாமல் தடுக்கின்றனர். அத்தியாவசியப் பொருள்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், அனைத்துக் கேரள வாகனங்களையும் அனுமதிக்கும்படி அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

தமிழக கேரள எல்லை
தமிழக கேரள எல்லை

கேரளாவில் சொல்வதைப்போல, நாங்கள் எல்லோருக்கும் அனுமதி மறுப்பதில்லை. உண்மையான பாதிப்பு உடையவர்களுக்கு உதவி செய்து கொண்டுதான் இருக்கிறோம். நேற்றுகூட ஒரு கர்ப்பிணிப் பெண்ணை சிகிச்சைக்காக தமிழகத்துக்குள் அனுமதித்தோம்” என்றனர் ஆதங்கத்துடன்.

கேரள அரசின் இந்தச் செயலால் கடந்த இரண்டு நாள்களில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, தமிழக அரசு இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.

தமிழக கேரள எல்லை
தமிழக கேரள எல்லை

மேலும் எல்லையில், மக்கள் கூட்டம் அதிகமாகக் கூடுவதால், அதிகாரிகள் எண்ணிக்கையும் சற்று அதிகரிப்பதன் மூலம் கூட்டம் கூடுவதை தவிர்க்க முடியும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்

அடுத்த கட்டுரைக்கு