Published:Updated:

`இயற்கையானது அல்ல; செயற்கையாக உருவாக்கப்பட்ட வைரஸ்!’ -மத்திய அமைச்சர் நிதின் கட்கரி #Corona

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

``கொரோனா வைரஸ் செயற்கையாக உருவாக்கப்பட்டது; இயற்கையாக உருவானது அல்ல" என மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருக்கிறார்.

சீனாவின் வுகான் சந்தைப் பகுதியில் முதன்முதலாகக் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், இன்று உலக அளவில் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கிறது. இதுவரை உலகளவில் 47.27 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் இந்த வைரஸ் தாக்குதலால் 2,98,059 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தடுப்பு
கொரோனா தடுப்பு

கொரோனா வைரஸுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகளை உலக நாடுகள் பலவும் தீவிரப்படுத்தியுள்ளன. ஆனால், தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வர குறைந்தது இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகலாம் என்று தெரிகிறது. வைரஸ் பரவல் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவிலும் மூன்றாவது முறையாக மே 17 வரை ஊரடங்கு அமலில் இருக்கிறது. இது புதிய விதிமுறைகளுடன் நன்காவது முறையாக நீட்டிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார்.

கொரோனா வைரஸ் தோற்றம் குறித்து பல்வேறு கருத்துகள் சொல்லப்பட்டு வருகின்றன. அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் வுகான் நகர ஆய்வகம் ஒன்றிலிருந்து இந்த வைரஸ் வெளியேறி இருக்கலாம். இது செயற்கையாக ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட வைரஸ் என சீனா மீது குற்றம் சாட்டி வருகின்றன.

ட்ரம்ப்
ட்ரம்ப்
AP

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்கிறார். உலக நாடுகள் பலவும் கொரோனா வைரஸ் உருவாக்கம் குறித்து கருத்துத் தெரிவித்து வந்துள்ள நிலையில், இந்திய அரசு சார்பில் இதுதொடர்பாக எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படாமல் இருந்தது.

`வுகான் ஆய்வகத்திலிருந்து வெளியானதா கொரோனா?’ - பத்திரிகையாளர்களின் கேள்வியும் ட்ரம்பின் பதிலும்

இந்தநிலையில், முதன்முறையாக இதுகுறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கருத்துக் கூறியிருக்கிறார். ஆங்கில ஊடகமான என்.டி.டி.விக்குப் பேட்டியளித்தபோது பேசிய அவர், ``கொரோனாவுடன் வாழ்வதற்கு நாம் பழக வேண்டும். அது இயற்கையான வைரஸ் இல்லை என்பதால் அதனுடன் வாழப் பழகுவது மிகவும் முக்கியமானது. கொரோனா செயற்கையாக உருவாக்கப்பட்ட வைரஸ், அதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் பலவும் ஈடுபட்டுள்ளன’’ என்றார்.

நிதின் கட்கரி
நிதின் கட்கரி

மேலும், ``இரண்டாவது விஷயம் வைரஸைக் கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம். வைரஸை உடனடியாகக் கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம் நமக்குத் தேவை. அதற்காக நமக்கு சிறந்த தொழில்நுட்பம் வேண்டும். இதை நாம் எதிர்பார்க்க முடியாது, ஏனென்றால் அது ஆய்வகத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டது’’ என்றும் அவர் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு