Published:Updated:

`கொரோனா' ஜவுளிக்கடை... வியப்பும் பீதியுமாகக் கடந்து செல்லும் கேரள மக்கள்

கொரோனா ஜவுளிக்கடை
கொரோனா ஜவுளிக்கடை ( mathrubhumi )

மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததும் கேரளாவில் கொரோனா பரவ முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

உலகத்தை நடுநடுங்க வைத்துக்கொண்டிருக்கிறது கொரோனா. இந்தியாவிலும் கொரோனா பரவியுள்ளதால், பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் கேரளாவும் ஒன்று. இந்தக் குட்டி மாநிலத்தில் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா வேகமாகப் பரவுவதற்கு, அந்த மாநிலத்தில் 25 லட்சம் பேர் 124 சர்வதேச நாடுகளில் பணி புரிவதும் ஒரு காரணமாக அமைந்துள்ளது.

கொரோனா வார்டு
கொரோனா வார்டு

வெளிநாடுகளில் பணிபுரிபவர்களில் ஏராளமானோர் பல நாடுகளிலிருந்து கேரளாவுக்குத் திரும்பியுள்ளனர். சுற்றுலா மேற்கொள்வதிலும் கேரள மக்கள்தான் இந்தியாவில் முதலிடத்தில் உள்ளனர். அதேபோல, விமான நிலையங்களில் சோதனைகள் மேற்கொள்வதற்கு முன்னரே, சீன சுற்றுலாப் பயணிகளும் இந்த மாநிலத்துக்கு வந்து தங்கியிருந்துவிட்டுச் சென்றுள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகமாகியுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததும் கேரளாவில் இந்த வைரஸ் பரவ முக்கிய காரணம் என்று கூறுகிறார்கள். கடந்த பிப்ரவரி 29-ம் தேதி இத்தாலிக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த கேரளாவைச் சேர்ந்த தந்தை, தாய், மகன் மூன்று பேரும் கத்தார் தலைநகர் தோஹா வழியாகக் கொச்சி திரும்பியுள்ளனர். விமான நிலையத்தில், இவர்களுக்கு எந்தச் சோதனையும் நடத்தப்படவில்லை. இவர்களால் மட்டும் அந்த விமானத்தில் கொச்சிக்கு வந்த 11 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. பின்னர், இந்தக் குடும்பத்தினரைக் கண்டுபிடித்த கேரள சுகாதாரத்துறை அவர்களைத் தனிமைப்படுத்தி வைத்துள்ளது.

கொரோனா என்ற பெயர் டிக்ஸ்னரியில் கிடைத்தது.
கொரோனா ஜவுளிக்கடை உரிமையாளர்

இப்படியாக , கொரோனா வைரஸ் கேரளாவைக் கொடுமைப்படுத்திக்கொண்டிருக்க, அந்த மாநிலத்தில் `கொரோனா டெக்ஸ்டைல்' என்ற ஜவுளிக்கடை பாப்புலராகி வருகிறது. கொச்சியிலிருந்து 40 கி.மீ தொலைவிலுள்ள மூவாத்துப்புழாவில் `கொரோனா' என்று பெயரிடப்பட்டுள்ள ஜவுளிக்கடை உள்ளது. தற்போது, இந்தப் பெயர் பாப்புலராகியிருப்பதால், அந்தக் கடையை பொதுமக்கள் வியப்புடனும் ஒருவித பீதியுடனும் பார்த்துச் செல்கின்றனர்.

`மனிதர்களிடம் சோதிக்கப்படாதது; 14 மாத ஃபாலோ அப்!'- #Corona தடுப்பூசி சோதனையில் கலந்துகொண்ட முதல்நபர்

சிலர் கடை முன் நின்று செல்ஃபியும் எடுத்துக்கொள்கின்றனர். இந்தக் கடை பரீத் என்பவருக்குச் சொந்தமானது. `எப்படி இந்தப் பெயரைத் தேர்வு செய்தீர்கள்' என்று கேட்டால் , டிக்ஸ்னரியில் இந்தப் பெயர் கிடைத்தாகப் பரீத் சொல்கிறார். கொரோனா என்று பெயரிடப்பட்டிருந்தாலும், அந்த வைரஸ்க்கு இந்தக் கடையில் இடம் கிடையாது. வைரஸ் நுழைந்துவிடாமல் இருக்க பல்வேறு பாதுகாப்புப் பணிகளை பரீத் மேற்கொண்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு