Published:Updated:

`கொரோனா என்னைக் கடிக்காது... அது எப்படி?!' - சிறுமியின் கியூட் விழிப்புணர்வு ஷேரிங்

சிறுமி
சிறுமி ( Facebook )

``இந்தக் கொரோனா நிபுணரின் பேச்சைக் கேட்டு நானும் கைகழுவச் செல்கிறேன். வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு பதிவுகளில் இதுதான் கியூட்"

கொரோனா வைரஸ் பரவி வருவது தொடர்பான அச்சம் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. நோய் பரவாமல் இருக்கவும் மக்கள் அச்சப்படாமல் இருக்கவும் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அவற்றை பின்பற்றுவது தொடர்பாகவும் வைரஸ் குறித்த விளக்கங்களையும் சுகாதாரத்துறை அதிகாரிகள், அரசியல்வாதிகள், பிரபலங்கள் உட்பட பலரும் வெவ்வேறு வடிவங்களில் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், வைரஸ் தொடர்பாக சிறுமி சொல்லியிருக்கும் செய்தி நெட்டிசன்களைக் கவர்ந்துள்ளது.

ஹியூமன்ஸ் ஆஹ் பாம்பே எனும் முகநூல் பக்கத்தில் சிறுமியின் கருத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ``கொரோனா பற்றி எனக்கு எல்லாம் தெரியும்" என்று மழலை மொழியில் கூறும் அந்தச் சிறுமி, ``நான் வலுவாக இருக்கப்போகிறேன். அது என்னைக் கடிக்காது" என்கிறார். `அது எப்படி' என்று கேட்க, ``நான் நிறைய பால் குடிக்கிறேன். காய்கறிகளைச் சாப்பிடுகிறேன். நான் எல்லோரையும் கைகழுவ வைக்கிறேன். அது உங்களையும் கடிப்பதற்கு முன்பு நீங்களும் உங்களது கைகளைக் கழுவுங்கள்" என்று கூறியுள்ளார்.

“I know all about the Cunnona Virus, but I’m going to be strong so that it doesn’t bite me!” “How’s that?” “Because I am...

Posted by Humans of Bombay on Wednesday, March 18, 2020

``சமீபத்தில் மருத்துவமனைக்கு என்னுடைய நண்பரின் 4 வயது மகளுடன் சென்றிருந்தேன். ஜன்னலுக்கு அருகில் நின்றுகொண்டிருந்த அவளுடைய தாத்தாவைப் பார்த்து `ஜன்னல்களைத் தொடாதீர்கள். உங்களுக்குக் கொரோனா வரும். உங்களது கைகளைக் கழுவுங்கள்' என்று கூறியதைப் பார்க்க ஆச்சர்யமாக இருந்தது" என நெட்டிசன்களும் தாங்கள் பார்த்த குழந்தைகளின் விழிப்புணர்வைப் பற்றி கமென்டுகளில் பதிவு செய்திருந்தனர்.

``இந்தக் கொரோனா நிபுணரின் பேச்சைக் கேட்டு நானும் கைகழுவச் செல்கிறேன். வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு பதிவுகளில் இதுதான் கியூட்" என்று மேலும் பல கமென்டுகளையும் நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர். சுமார் 12,000-க்கும் அதிகமான லைக்ஸ்களையும் நூற்றுக்கணக்கான ஷேர்களையும் இந்தப் பதிவு பெற்றுள்ளது.

`10 நிமிடத்துக்கு ஒருவர் உயிரிழப்பு!’ - இரானை வாட்டி வதைக்கும் கொரோனா தொற்று
அடுத்த கட்டுரைக்கு