Published:Updated:

`புன்னகை மன்னன்' படப்பாணியில் தற்கொலைக்கு முயன்ற காதல் ஜோடி - தப்பித்த பெண் என்ன செய்தார் தெரியுமா?

representation image

நீண்ட நாள்களாகக் காதலித்து வந்த இருவர், வெவ்வேறு நபர்களைத் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதனால் இருவரும் தற்கொலை செய்துகொள்ள ஆற்றில் குதித்துள்ளனர். இதில் உஷாரான காதலன் தற்கொலையிலிருந்து எஸ்கேப் ஆகியுள்ளார். மீண்டு வந்த காதலி என்ன செய்தார் தெரியுமா?

`புன்னகை மன்னன்' படப்பாணியில் தற்கொலைக்கு முயன்ற காதல் ஜோடி - தப்பித்த பெண் என்ன செய்தார் தெரியுமா?

நீண்ட நாள்களாகக் காதலித்து வந்த இருவர், வெவ்வேறு நபர்களைத் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதனால் இருவரும் தற்கொலை செய்துகொள்ள ஆற்றில் குதித்துள்ளனர். இதில் உஷாரான காதலன் தற்கொலையிலிருந்து எஸ்கேப் ஆகியுள்ளார். மீண்டு வந்த காதலி என்ன செய்தார் தெரியுமா?

Published:Updated:
representation image

பிரயாக்ராஜ் (அலகாபாத்) பகுதியைச் சேர்ந்த இருவர், நீண்ட நாள்களாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் காதலித்த அந்தப் பெண் வேறுவொரு நபரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். பின்னர் 32 வயதான அந்தப்பெண் மணவாழ்வு பிடிக்காமல் தன் முன்னாள் காதலனான 'சந்து' என்பவரை திருமணம் செய்துகொள்ள தனது 6 வயது குழந்தையுடன் காதலனின் சொந்த ஊரான புனேவிற்கு வந்துள்ளார். அங்குதான் அவருக்கு அதிர்ச்சிக் காத்திருந்தது.

முன்னாள் காதலன் சந்து சொல்லிக்கொள்ளாமல் வேறொருப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டுள்ளார். இப்படி இருவரும் மாறிமாறி வெவ்வேறு நபர்களைத் திருமணம் செய்துகொள்ள, ஏமாற்றமடைந்த அந்தப் பெண் மீண்டும் தன் குழந்தையுடன் தன் சொந்த ஊரான பிரயாக்ராஜ் பகுதிக்கே வந்துள்ளார். அதன்பின் முன்னாள் காதலன் சந்து திருமணமான தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு வருவதாக உறுதி அளித்துள்ளார். இருப்பினும் இருவருக்கும் இடையே சண்டைகள் வெடிக்க இருவரும் தற்கொலை செய்துகொள்ளத் திட்டமிட்டுள்ளனர்.

representation image
representation image

இவர்களின் தற்கொலைத் திட்டத்தின் படி இருவரும் யமுனை ஆற்றில் விழுந்து தற்கொலை செய்துகொள்ள முயன்றபோது அந்தப்பெண் முதலில் ஆற்றில் குதித்துள்ளார். ஆனால் முன்னாள் காதலன் சந்துவோ, உஷாராக வாழவேண்டும் என்று ஆசைப்பட்டு தற்கொலை செய்துகொள்ளாமல் பின்வாங்கியுள்ளார். குதித்தப்பின் விஷயம் தெரிந்த அந்தப் பெண் அரைகுறை நீச்சலுடன் தப்பியுள்ளார்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்தப் பெண்ணைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சிகிச்சைப் பெற்று வரும் அந்தப் பெண், தற்கொலை செய்வதாகச் சொல்லிவிட்டு தன்னை ஏமாற்றி, தான் காயமடைய காரணமாக இருந்ததாக சந்துவின் மீது புகார் அளித்துள்ளார். போலீசார் இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்தச் சம்பவம் கமல், ரேகா நடித்த 'புன்னகை மன்னன்' படப்பாணியில் இருப்பதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism