Published:Updated:

`பாரத் பயோடெக் பற்றிய 14 கட்டுரைகளை நீக்குக!' - `தி வயர்' ஊடகத்துக்கு நீதிமன்றம் உத்தரவு

இணையதளத்தில் அந்த ஊடகம் வெளியிட்ட 14 கட்டுரைகளையும் 48 மணி நேரத்துக்குள் நீக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பாரத் பயோடெக் மற்றும் கோவாக்சின் பற்றி அவதூறான எந்தக் கட்டுரையையும் வெளியிட தி வயர் இணைய ஊடகத்துக்குத் தடைவிதித்தது.

பாரத் பயோடெக் மற்றும் கோவாக்சின் பற்றிய தவறான குற்றச்சாட்டுகள் அடங்கிய கட்டுரைகளை, `தி வயர்' இணையதள செய்தி ஊடகம் வெளியிட்டதாக பாரத் பயோடெக் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.விவேக் ரெட்டி நீதிமன்றத்தில் வாதிட்டார். அதைத் தொடர்ந்து, 48 மணி நேரத்துக்குள் தி வயர் பதிவிட்ட கட்டுரைகளை அகற்றவதுடன், பாரத் பயோடெக் மற்றும் கோவாக்சின் குறித்த அவதூறான கட்டுரைகளை இனி வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

Bharat Biotech
Bharat Biotech
AP Photo/Mahesh Kumar A

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பாரத் பயோடெக், கோவிட்-19 தடுப்பூசிகளைத் தயாரித்து வருகிறது. இந்நிலையில், பாரத் பயோடெக் குறித்து தி வயர் இணையதள செய்தி ஊடகம் பதிவிட்ட கட்டுரைகள் நிறுவனத்துக்கு அவதூறு விளைவிப்பதாக உள்ளதென 100 கோடி ரூபாய் அவதூறு வழக்கை ரங்கா ரெட்டி மாவட்ட நீதிமன்றத்தில் பாரத் பயோடெக் நிறுவனம் தொடுத்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பாரத் பயோடெக் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.விவேக் ரெட்டி, பயோடெக் மற்றும் அதன் தயாரிப்பான கோவாக்சின் தொடர்பாகத் தவறான குற்றச்சாட்டுகள் அடங்கிய கட்டுரைகளை தி வயர் இணையதள செய்தி ஊடகம் பதிவிட்டுள்ளதாகவும், அவை நிறுவனத்தின் நற்பெயரைக் கெடுக்கும் நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார்.

இணையதளத்தில் அந்த ஊடகம் வெளியிட்ட 14 கட்டுரைகளையும் 48 மணி நேரத்துக்குள் நீக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பாரத் பயோடெக் மற்றும் கோவாக்சின் பற்றி அவதூறான எந்தக் கட்டுரையையும் வெளியிட தி வயர் இணைய ஊடகத்துக்குத் தடைவிதித்தது.

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, தி வயர் நிறுவனத்தின் ஆசிரியர், சித்தார்த் வரதராஜன் ட்விட்டர் பக்கத்தில், ``கடந்த ஒரு வருடத்தில் வெளியிடப்பட்ட 14 கோவாக்சின் கட்டுரைகளை, எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் அகற்ற உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம். பாரத் பயோடெக் எங்களுக்கு எதிராக முன்வைத்த பொய்யான கூற்றுகளை மறுக்க எங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. பாரத்பயோடெக்கின் அச்சுறுத்தல் எங்களை ஒன்றும் செய்யாது" எனப் பதிவிட்டுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism