Published:Updated:

`தடுப்பூசி போடாதவர்கள் வெளியே வர தடைவிதிப்பது நியாயமற்றது!' - மிசோரம் அரசை விமர்சித்த நீதிமன்றம்

Court (Representational Image)
Court (Representational Image)

எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இந்தத் தவற்றை மிசோரம் அரசு திருத்திக்கொள்ளவேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த உலகத்திலிருந்து கொரோனா நோய்த்தொற்றை வேரறுக்க தடுப்பூசி என்கிற பேராயுதம்தான் நமக்குத் துணைநிற்கும் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் தடுப்பூசி சார்ந்த கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுவது மக்களது தினசரி வாழ்க்கையையே பாதிக்கும் என்றால் அது நிச்சயம் ஏற்புடையது அல்ல என்று, கவுகாத்தி நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து கவனம் பெற்றுள்ளது.

விஷயம் இதுதான். கடந்த ஜூன் மாதம் 30-ம் தேதி மிசோரம் அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. அதில், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட தனிநபர்கள் மட்டுமே கடைகள் மற்றும் அங்காடிகளை நடத்தவேண்டும் என்றும், இவை தவிர வேறு எந்தவொரு வேலையை எடுத்துச் செய்பவராக இருந்தாலும் தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே அதற்கு அனுமதி வழங்கப்படும் என்றும் புதிய வழிகாட்டு நெறிமுறையில் குறிப்பிட்டிருந்தது.

COVID-19 vaccine
COVID-19 vaccine
AP Photo/Anupam Nath
100% கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட சீக்கம்பட்டு கிராமம்; சாதித்தது எப்படி?

கடைகள் மற்றும் அங்காடிகளில் வேலை செய்யும் ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள், தாங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றை அளிக்கவேண்டும் என்றும், இந்தச் சான்றுகள் காவல்துறை மற்றும் கொரோனா பெருந்தொற்றுத் தடுப்பு ஊழியர்களால் சரிபார்க்கப்படும் என்றும் அதில் சொல்லியிருந்தது.

ஆனால் இந்த வழிகாட்டு நெறிமுறைகளுக்கு எதிராக வழக்கு ஒன்று தொடுக்கப்பட, அதன் பின்னரே இந்தச் செய்தி நாடு முழுவதும் பேசுபொருளாகியிருக்கிறது.

தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு அனுமதி மறுக்கப்படுவது குறித்த மிசோரம் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் நியாயமற்றது மற்றும் தன்னிச்சையானது என்று, இந்த வழக்கை விசாரித்துவரும் கவுகாத்தி உயர்நீதிமன்றம் தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. மைக்கேல் ஸோத்தான்கும் மற்றும் நெல்சன் சைலோ ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழு இந்தக் கருத்தினைத் தெரிவித்துள்ளனர்.

மிசோரம் அரசு வெளியிட்டிருக்கும் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 14 மற்றும் 21-ஐ மீறும் செயல் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ``கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கும் நோய்த்தொற்று வரும் வாய்ப்பு இருக்கிறது. அதேபோல அப்படி பாதிக்கப்படுபவர்களால் மற்றவர்களுக்கும் நோய்த்தொற்று ஏற்படலாம் என்பதும் தெரிய வருகிறது.

Court (Representational Image)
Court (Representational Image)
Covid Questions: 2 தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் அடுத்து பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ள வேண்டுமா?

எனவே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மற்றும் போட்டுக்கொள்ளாதவர்கள் ஆகிய இருவருக்குமே நோய்த்தொற்று வருவதற்கும், அவர்கள் மூலம் நோய்த்தொற்று மற்றவர்களுக்குப் பரவும் வாய்ப்பும் இருக்கும்போது, தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் வீட்டை விட்டு வெளியே வரவும், தங்களது குடும்பத் தேவைகளுக்காகப் பொருளீட்டவும், உணவு, மருந்து உள்ளிட்ட தேவையான பொருள்களை வாங்கவுமே தடைவிதிப்பதென்பது நியாயமற்றது" என்று நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இந்தத் தவற்றை மிசோரம் அரசு திருத்திக்கொள்ளவேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஜூலை 14-ம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு