Published:Updated:

``பிறப்புறுப்பில் கரண்ட் ஷாக் கொடுத்து சித்ரவதை செய்தனர்" - போலீஸ் மீது பட்டியலின இளைஞர் புகார்

சிறை தண்டனை
News
சிறை தண்டனை ( மாதிரி படம் )

செப்டம்பர் 4, 5, 6 ஆகிய தேதிகளில் என்னுடைய அந்தரங்க உறுப்பில் கரன்ட் ஷாக் கொடுத்து சித்ரவதை செய்தனர்.

``பிறப்புறுப்பில் கரண்ட் ஷாக் கொடுத்து சித்ரவதை செய்தனர்" - போலீஸ் மீது பட்டியலின இளைஞர் புகார்

செப்டம்பர் 4, 5, 6 ஆகிய தேதிகளில் என்னுடைய அந்தரங்க உறுப்பில் கரன்ட் ஷாக் கொடுத்து சித்ரவதை செய்தனர்.

Published:Updated:
சிறை தண்டனை
News
சிறை தண்டனை ( மாதிரி படம் )

இந்திய அரசியல் சாசன சட்டப்படி, ஒருவரை பொய்வழக்கில் கைது செய்வதும், போலீஸ் காவலில் அடித்து சித்ரவதை செய்வதும் குற்றம் என்றாலுமே, இதுபோன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடப்பதை ஊடகங்களும், பத்திரிகைகளும், வெளிச்சம் போட்டு காட்டிக்கொண்டுதான் தான் இருக்கின்றன. இன்னும் ஒருபடிக்கு மேல், லாக்-அப் மரணங்களும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்த நிலையில், பெங்களூரூவைச் சேர்ந்த பட்டியலின இளைஞர் ஒருவர், போலீஸார் தன்னை 12 நாள்கள் சிறையில் வைத்து அந்தரங்க உறுப்பில் கரன்ட் ஷாக் கொடுத்து சித்ரவதை செய்ததாக, குற்றம் சாட்டியிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சிறை
சிறை

அந்த இளைஞர், கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, மாநில மனித உரிமைகள் ஆணையம் மற்றும் பெங்களூரு போலீஸ் கமிஷனர் ஆகியோரிடம் இதுகுறித்து புகாரளித்திருக்கிறார். அதில், ராமமூர்த்தி நகர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் மெல்வின் பிரான்சிஸ், சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் மற்றும் பிற ஊழியர்கள் மீது புகாரளித்திருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஊடகங்களில் வெளியான தகவலின்படி அந்த இளைஞர் தன்னுடைய புகாரில், ``செப்டம்பர் 4-ம் தேதியன்று, பெங்களூரிலுள்ள பி.நாராயணபுரா பேருந்து நிலையத்திலிருந்து என்னை 7 போலீஸார் காரில் ஏற்றிக்கொண்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

சிறை தண்டனை
சிறை தண்டனை
மாதிரி படம்

அங்கு காவல் ஆய்வாளர் மெல்வினின் அறிவுறுத்தலின் பேரில், அவர்கள் என்னை மாடிக்கு அழைத்துச் சென்று மரக்கட்டைகள் மற்றும் கிரிக்கெட் மட்டைகளால் தாக்கினார்கள். செப்டம்பர் 4, 5, 6 ஆகிய தேதிகளில் என்னுடைய அந்தரங்க உறுப்பில் கரன்ட் ஷாக் கொடுத்து சித்ரவதை செய்தனர். மேலும் அவர்கள் என் கை, கால்களை மடக்கி, பூட்ஸ் காலணியால் மிதித்து, என்மீது சிறுநீரைத் தெளித்தனர். அதோடு, சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் என் மார்பில் உட்கார்ந்துகொண்டு என் முகத்தை பூட்ஸ் காலால் தாக்கினார். அதன்பின்னர், 12 நாட்களுக்குப் பிறகு நான் விடுவிக்கப்பட்டேன், ஆனால் இந்த சித்திரவதை பற்றி ஏதாவது வெளியில் சொன்னால், பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைத்துவிடுவோம் என்று அவர்கள் மிரட்டினர்" என்று கூறியிருக்கிறார்.

police
police

இருப்பினும் போலீஸ் தரப்பு இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து டி.சி.பி பீமாசங்கர் குலேத், கொள்ளை முயற்சி தொடர்பான வழக்கு காரணமாக தான் கைது செய்யப்படுவோம் என்று அவர் பயப்படுவதாகவும், அவரிடம் போலீஸார் விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் கொடுத்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.