Published:Updated:

மாமியாரின் உடலை சுமந்து சென்ற மரு`மகள்கள்’ - மகாராஷ்டிராவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

ராம் பிரசாத்

மகாராஷ்டிரா மாநிலத்தில் மாமியாரின் சடலத்தை மயானம் வரை மருமகள்கள் சுமந்து சென்ற நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.

Daughters-in-laws break tradition
Daughters-in-laws break tradition ( Zee news )

ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சி அந்த வீட்டின் பெண்கள் கையில்தான் உள்ளது. குடும்பத்தில் பொருளாதார ரீதியிலாக ஆயிரம் பிரச்னைகள் இருந்தாலும் அதற்காக தீர்வு என்ற ஒன்று இருக்கும். என்ட் கார்டே இல்லாமல் நீண்டுகொண்டிருக்கும் பிரச்னை மாமியார் - மருமகள் சண்டைகள்தான். இப்படியான சூழலில்தான் மகாராஷ்டிராவில் மாமியாரின் சடலத்தை மருமகள்கள் சுமந்து சென்ற சம்பவம் நடந்துள்ளது.

Daughters-in-law break tradition
Daughters-in-law break tradition
News 18 Hindi

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சந்தர்பாய் நைக்வாடே என்பவருக்கு 4 மகன்கள். இவர்கள் அனைவருக்கும் திருமணம் முடிந்துவிட்டது. மருமகள்கள், பேரக்குழந்தைகள் என மகிழ்வான வாழ்க்கையை வாழ்ந்துவந்தார். 83 வயதான சந்தர்பாய் நைக்வாடே வயது மூப்பு காரணமாக நேற்று மரணடைந்தார். 2013-ம் ஆண்டு சந்தர்பாயின் கணவர் Dagdu காலமானார். அப்போது அவரது கண்கள் குடும்பத்தினரால் தானமாக வழங்கப்பட்டது. கணவரைப் போலவே தனது இறப்புக்குப் பின்னரும் கண்களைத் தானமாக வழங்க வேண்டும் என்று தன் குடும்பத்தினரிடம் விருப்பம் தெரிவித்திருந்தார். அவரின் விருப்பப்படியே கண்கள் தானமாக வழங்கப்பட்டன.

"சீரியல்ல நான் போடுற எல்லா டிரஸ்ஸும் மாமியார் செலக்ட் பண்றதுதான்'' -'அரண்மனைகிளி' மோனிஷா!

சந்தர்பாய் தன் மருமகள்களிடம் மிகவும் அன்பாக இருந்துள்ளார். அவர்களை தன் மகள்கள்போல் பாவித்துள்ளார். இதனால் அவரது இறப்பு அந்தக் குடும்பத்தைக் கடுமையாகப் பாதித்தது. சந்தர்பாயின் உடலுக்கு உறவினர்கள் சடங்கு சம்பிரதாயங்கள் செய்த பின்னர் மயானத்துக்கு எடுத்துச்செல்ல ஆயத்தமாகினர். நான்கு மருமகள்களும் தங்களது மாமியாரின் உடலை மயானம் வரை சுமந்து செல்ல முடிவு செய்துள்ளதாக உறவினர்களிடம் தெரிவித்தனர். இதற்கு உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கிராம மக்கள் சிலரும் சம்பிரதாயங்களை மீறுவதாக கூறினர். ஆனால், மருமகள்கள் நால்வரும் தங்களது முடிவில் உறுதியாக இருந்தனர்.

Representation image
Representation image
Vikatan

மாமியாரின் உடலை சுமந்துகொண்டு மயானம் நோக்கி நடந்தனர். நான்கு பெண்கள் சடலத்தை சுமந்து செல்வதைப் பார்த்த பொதுமக்கள் சிலரும் அவர்களுடன் இணைந்து சந்தர்பாயின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். அவர்களது வீட்டுக்கும் மயானத்துக்கும் சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவு இருந்தது. குறிப்பிட்ட தூரம் நான்கு பெண்களும், ஆண்களும் மாறி மாறி சுமந்து சென்றனர். மயான மேடைக்கு சந்தர்பாயின் உடலை மருமகள்களே சுமந்து சென்றனர். மாமியார் மீது மருமகள்கள் கொண்ட பாசத்தைக் கண்டு அப்பகுதிமக்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.