Published:Updated:

மகன்கள் வராததால் தாயை தோளில் சுமந்து இறுதிச் சடங்கு செய்த மகள்கள்; ஒடிஷாவில் நெகிழ்ச்சி சம்பவம்!

இறுதிச் சடங்கு செய்த மகள்கள்
News
இறுதிச் சடங்கு செய்த மகள்கள்

அவரது இரு மகன்களில் யாரும் இறுதிச் சடங்கிற்கு வரவில்லை என்று அக்கம்பக்கத்தினர் தெரிவித்த நிலையில், நான்கு மகள்களும் கலாசார தடையை உடைத்து தங்கள் தாயை தகனம் செய்ய முடிவு செய்தனர்.

ஒடிசாவின் பூரியில் நடந்த தங்கள் தாயின் இறுதிச் சடங்கிற்கு, தங்களின் இரு சகோதரர்களும் வராததால், நான்கு மகள்களும் தாயின் உடலை 4 கி.மீ தூரம் வரை சுடுகாட்டுக்குத் தூக்கிச் சென்று இறுதிச் சடங்குகளைச் செய்துள்ளனர்.

ஒடிசா மாநிலம் பூரி நகரில் ஜதி நாயக் என்ற மூதாட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானார். இவருக்கு இரு மகன்கள், மற்றும் 4 மகள்கள் உள்ளனர்.

Old age (Representational image)
Old age (Representational image)
Pixabay

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நான்கு மகள்களும் திருமணமாகி கணவன் வீட்டில் வசித்து வருகின்றனர். மகன்களும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். பல ஆண்டுகளாகத் தாயைப் பார்த்துக்கொள்ளாமல் மகன்கள் புறக்கணித்து வந்துள்ளனர். இந்நிலையில், மூதாட்டி உயிரிழந்த தகவலை அக்கம்பக்கத்தினர் இரு மகன்களுக்கும் தெரிவித்துள்ளனர். தாயின் இறப்பிற்குக்கூட வராமல் இரு மகன்களும் இறுதிச் சடங்கை புறக்கணித்துள்ளனர்.

அவரது இரு மகன்களில் யாரும் இறுதிச் சடங்கிற்கு வரவில்லை என்று அக்கம்பக்கத்தினர் தெரிவித்த நிலையில், நான்கு மகள்களும் கலாசார தடையை உடைத்து தங்கள் தாயை தகனம் செய்ய முடிவு செய்தனர்.

மகள்கள் தங்கள் தாயின் உடலை வீட்டிற்கு வெளியே எடுத்துச் சென்று, அக்கம்பக்கத்தினரின் உதவியுடன், உடலை தகனத்திற்கு எடுத்துச் செல்ல தேவையான பாடையை தயார் செய்துள்ளனர். அவர்கள் தாயின் உடலைத் தோளில் சுமந்துகொண்டு 4 கிலோமீட்டர் தூரம் வரை நடந்தே தகனம் செய்யும் மைதானத்தை அடைந்து இறுதிச் சடங்குகளைச் செய்துள்ளனர்.

இறுதிச் சடங்கு செய்த மகள்கள்
இறுதிச் சடங்கு செய்த மகள்கள்

இதை குறித்து இந்தியா டுடேவிடம் ஜதி நாயக்கின் மருமகன்களில் ஒருவர் பேசுகையில், ``சில நாட்களுக்கு முன்பு அவரது மாமியார் அவர்களின் வீட்டிற்குச் சென்று, "நீ என் மூத்த மகன், என் இரண்டு மகன்களில் யாரும் என்னைக் கவனித்துக் கொள்ளவில்லை. அவர்கள் பல வருடங்களாக என்னைச் சந்திக்கவில்லை" என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.

தாயின் சடலத்தை பெண்களே நான்கு கி.மீ. தூரம் உள்ள சுடுகாடு வரை சுமந்து அனைத்து காரியத்தையும் செய்து முடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.