Published:Updated:

கொசுவலை கேட்டு நீதிமன்றத்துக்குக் கொசு பாட்டிலுடன் வந்த தாவூத் கூட்டாளி... நிராகரித்த நீதிபதி

தாவூத் கூட்டாளி லக்டாவாலா

சிறையில் கொசுத் தொல்லை அதிகமாக இருப்பதால் கொசுவலை கொடுக்க வேண்டும் என்று கோரி, கொசு பாட்டிலை கோர்ட்டுக்கு கொண்டுவந்து கோரிக்கை விடுத்தார்.

கொசுவலை கேட்டு நீதிமன்றத்துக்குக் கொசு பாட்டிலுடன் வந்த தாவூத் கூட்டாளி... நிராகரித்த நீதிபதி

சிறையில் கொசுத் தொல்லை அதிகமாக இருப்பதால் கொசுவலை கொடுக்க வேண்டும் என்று கோரி, கொசு பாட்டிலை கோர்ட்டுக்கு கொண்டுவந்து கோரிக்கை விடுத்தார்.

Published:Updated:
தாவூத் கூட்டாளி லக்டாவாலா

மிரட்டிப் பணம் பறித்த வழக்கில் தாவூத் இப்ராஹிமின் முன்னாள் கூட்டாளி இஜாஸ் லக்டாவாலா, கடந்த 2020-ம் ஆண்டு பீகார் மாநிலம், பாட்னாவில் மும்பை போலீஸாரால் கைதுசெய்யப்பட்டு மும்பை தலோஜா சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். விசாரணைக் கைதியாக இருக்கும் லக்டாவாலா இன்று விசாரணைக்காக மும்பை கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார். அவர் நீதிபதியிடம், கொசுக்கள் அதிகமாக இருந்த ஒரு பிளாஸ்டிக் பாட்டிலைக் காண்பித்தார். பின்னர், ``2020-ம் ஆண்டு சிறைக்கு என்னைக் கொண்டுவரும்போது கொசுவலை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டேன். ஆனால், அதன் பிறகு திடீரென ரெய்டு நடத்தி கொசுவலையைப் பிடுங்கிக்கொண்டனர். ஆனால், சிறை ஊழியர்கள், கோர்ட் அனுமதி பெற்ற கைதிகள் இன்னும் கொசுவலை பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றனர். சிறையில் அதிக அளவில் கொசுத் தொல்லை இருக்கிறது. என்னைப் போன்று மற்ற கைதிகளும் கொசுத் தொல்லையால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். எனவே, சிறையில் எனக்குக் கொசுவலை வைத்துக்கொள்ள அனுமதி வழங்க வேண்டும்" என்று கோரி மனு ஒன்றையும் நீதிபதியிடம் தாக்கல் செய்தார். ஆனால், அவருக்குக் கொசுவலை கொடுக்க போலீஸார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கொசுவலை கேட்டு நீதிமன்றத்துக்குக் கொசு பாட்டிலுடன் வந்த தாவூத் கூட்டாளி... நிராகரித்த நீதிபதி

கொசுவலை கொடுப்பது பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருக்கும் என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து லக்டாவாலாவுக்கு கொசுவலை வைத்துக்கொள்ள அனுமதிக்க முடியாது என்று தெரிவித்த நீதிபதி, ``மனுதாரர் வேண்டுமானால் ஓடாமாஸ் போன்ற இதர வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்" என்று தெரிவித்தார். லக்டாவாலா இதற்கு முன்பு கனடா, கம்போடியா, மலேசியா போன்ற நாடுகளில் பதுங்கியிருந்தார். தலோஜா சிறை மும்பைக்கு வெளியில் இருக்கிறது. மும்பைக்குள் தற்போது ஆர்தர் ரோடு சிறை மட்டுமே இருக்கிறது. இந்தச் சிறையிலும் அளவுக்கு அதிகமாகக் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கின்றனர். எனவே, அதிகமான கைதிகள் புறநகர்ப் பகுதியிலுள்ள தலோஜா சிறைக்கு அனுப்பப்பட்டுவருகின்றனர்.