Published:Updated:

`ஒரு இன்ச் நிலம்கூட எடுக்க அனுமதிக்க மாட்டோம்’ - தற்போதைய எல்லை நிலவரம் குறித்து ராஜ்நாத் சிங்

ராஜ்நாத் சிங்
ராஜ்நாத் சிங்

`பாங்கோங் ஏரியின் வடக்கு-தென்கரை குறித்து நாம் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினோம். எல்லைக் கோடு பகுதியில் படைகளைப் பயன்படுத்தப்படுவது தொடர்பான சில சிக்கல்கள் இன்னும் தீர்க்கப்படவில்லை’ -ராஜ்நாத் சிங்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இந்திய - சீன எல்லைப் பகுதியில் கடந்த ஆண்டு, ஏப்ரல் மாதம் முதல் தொடர்ந்து பதற்றம் நிலவிவந்தது. ஒருபுறம், இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் மட்டத்திலும், அரசு மட்டத்திலும் பேச்சுவார்த்தைகள் நடந்தபோதும், மறுபுறம் சீன ராணுவத்தின் அத்துமீறல்கள் தொடர்ந்தன. இதனால் தொடர்ந்து எல்லையில் பதற்றமான சூழலே நீடித்துவந்தது.

இந்தியா - சீனா மோதல்
இந்தியா - சீனா மோதல்
விகடன்

இந்தநிலையில், நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்தியா - சீனா எல்லைப் பகுதியின் தற்போதைய நிலை குறித்துப் பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ``இந்திய - சீன எல்லைப்பகுதியில் அமைதியை நிலைநாட்ட உறுதியெடுத்திருக்கிறோம். இரு நாட்டு உறவுகளை நல்லமுறையில் பேணுவதை இந்தியா எப்போதும் வலியுறுத்தும்.

இந்தியாவின் இறையாண்மையைக் காப்பாற்ற, நமது பாதுகாப்புப் படை எப்படிப்பட்ட சவால்களையும் எதிர்கொள்ளும் என நிரூபித்திருக்கிறார்கள்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், ``சீனாவுடனான எங்கள் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளின் மூலம், பாங்கோங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்குக் கரைகளில் படைகளைக் குறைப்பதற்கான உடன்படிக்கைக்கு வழி ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் பின்னர், இந்தியா-சீனா, ஒருங்கிணைந்த முறையில் முன்னோக்கிச் செல்வதை நிறுத்தும்” என்றார்.

ராஜ்நாத் சிங்
ராஜ்நாத் சிங்

`பாங்கோங் ஏரியின் வடக்கு-தென்கரை குறித்து நாம் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினோம். எல்லைக் கோடு பகுதியில் படைகளைப் பயன்படுத்துவது தொடர்பான சில சிக்கல்கள் இன்னும் தீர்க்கப்படவில்லை. விரைவில் அங்கிருக்கும் படைகள் முழுமையாக நீக்கப்படும் என இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன’ எனவும் தெரிவித்தார் ராஜ்நாத் சிங். மேலும் லடாக் விவகாரத்தில், சீனா மிரட்டலாக நடந்துகொண்டபோதும் இந்தியா படைகளைக் குவித்து பதிலடி கொடுத்ததாகவும், லடாக் விவகாரத்தில் ஓர் அங்குல நிலத்தைக்கூட விட்டுத் தர மாட்டோம் எனவும் உறுதிபட தெரிவித்தார் ராஜ்நாத் சிங்.

கிழக்கு லடாக் பகுதி; மைனஸ் 40 டிகிரி! - எல்லையில் குளிர்காலத்துக்குத் தயாராகும் இந்திய ராணுவம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு