Published:Updated:

டெல்லி: தாமதமான நீட் தேர்வு கவுன்சிலிங் - போராட்டத்தில் இறங்கிய மருத்துவர்கள்!

மருத்துவர்கள் போராட்டம்
News
மருத்துவர்கள் போராட்டம்

ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் அந்த மருத்துவமனையின் அவசர பிரிவு கட்டடத்துக்கு முன் குவிந்தனர்.

2020-ம் ஆண்டு நடக்கவிருந்த முதுகலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு, இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. இந்தத் தேர்வு முடிவுகள் வெளியாகி விட்டபோதிலும், மாணவர்களுக்கு கவுன்சிலிங் இன்னும் நடத்தப்படாமல் இருக்கிறது. அதனால், டெல்லியில் பயிற்சி மருத்துவர்கள் உடனடியாக கவுன்சிலிங் நடத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெல்லியின் லேடி ஹர்டிங்கே மருத்துவக் கல்லூரி, லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனை, சப்தர் ஜங் மருத்துவமனை, டாக்டர் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை உள்ளிட்ட பல மருத்துவமனைகளில் பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

மருத்துவர்கள் போராட்டம்
மருத்துவர்கள் போராட்டம்

அந்த வகையில், இன்று டெல்லியிலிருக்கும் அனைத்து அரசாங்க மருத்துவர்களும் சப்தர் ஜங் மருத்துவமனையின் முன் கூடி மிகப்பெரிய போராட்டத்தை நடத்திவருகின்றனர். முதுகலை மருத்துவப்படிப்பிற்கான நீட் தேர்வு கவுன்சிலிங்கை உடனடியாக நடத்தக் கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர். அவர்களை போலீஸார் தடியடி நடத்திக் கலைத்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் அந்த மருத்துவமனையின் அவசர பிரிவு கட்டடத்துக்கு முன் குவிந்தனர்.

இதனால் மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். ஒருபுறம் மருத்துவர்கள் பெரிய அளவில் போராட்டத்தை முன்னெடுத்து நடத்திவரும் போதிலும், ஒரு சில மூத்த மருத்துவர்களும், இறுதி ஆண்டு மருத்துவ மாணவர்களும் கர்ப்பிணிகள் மற்றும் அவசர சிகிச்சை தேவைப்படுவோருக்குச் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மருத்துவர்களின் இந்த போராட்டம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz