Published:Updated:

அரசு அளித்த உத்தரவாதம்; மீண்டும் பணிக்குத் திரும்பிய டெல்லி பயிற்சி மருத்துவர்கள்!

Doctors Protest
News
Doctors Protest ( Manish Swarup | AP Photo )

பேச்சுவார்த்தையில் பயிற்சி டாக்டர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறுவதாகவும், எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதையும் எடுத்துக் கூறினர்.

டெல்லியில் கடந்த 15 நாள்களாகப் பயிற்சி டாக்டர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். நீட் தேர்வு அடிப்படையில் முதுகலைப் படிப்புக்குக் கலந்தாய்வு நடத்தாமல் இருப்பதால், புதிய மாணவர் சேர்க்கை நடத்தப்படவில்லை, எனவே தங்களின் பணிச்சுமை அதிகரிக்கிறது என்றும், நீட் மூலம் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று கோரியும் போராட்டம் நடத்தி வந்தனர். மருத்துவப் படிப்புக்கான முதுகலை கலந்தாய்வு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

இதையடுத்து பயிற்சி டாக்டர்கள் டெல்லியில் சுப்ரீம் கோர்ட் நோக்கி பேரணி நடத்தினர். அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். அதோடு நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

Doctor (Representational Image)
Doctor (Representational Image)
Pixabay

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நாடு முழுவதும் உள்ள பயிற்சி டாக்டர்களும் போராட்டத்தில் கலந்துகொள்ள ஆரம்பித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்களுடன் சுகாதாரத்துறை அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில், போராட்டத்தை கைவிட வேண்டுமானால் டெல்லியில் போராட்டத்தில் கலந்து கொண்ட பயிற்சி டாக்டர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை திரும்பவேண்டும் என்று பயிற்சி டாக்டர்கள் முக்கிய கோரிக்கை வைத்திருந்தனர். இக்கோரிக்கை தொடர்பாக வியாழக்கிழமை டெல்லி போலீஸ் இணை கமிஷனருடன் பயிற்சி டாக்டர்கள் சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்தப் பேச்சுவார்த்தையில் பயிற்சி டாக்டர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறுவதாகவும், எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதையும் எடுத்துக் கூறினர். இதையடுத்து போராட்டத்தை திரும்ப பெற பயிற்சி டாக்டர்கள் முடிவு செய்தனர்.

இது தொடர்பாக பயிற்சி டாக்டர்கள் சங்க நிர்வாகி டாக்டர் மணிஷ் அளித்த பேட்டியில், ``டெல்லி போலீஸ் இணை கமிஷனருடன் நடந்த பேச்சுவார்த்தையில் பயிற்சி டாக்டர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற ஒப்புக்கொண்டதால் போராட்டத்தை திரும்பப் பெற முடிவு செய்துள்ளோம்.

Doctors Protest
Doctors Protest
Manish Swarup | AP Photo

ஏற்கெனவே நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பல ஆபரேஷன்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. எனவே உடனே போராட்டத்தை திரும்ப பெற முடிவு செய்துள்ளோம்" என்றார்.

வெள்ளிக்கிழமை பிற்பகல் பயிற்சி டாக்டர்கள் அனைவரும் மீண்டும் பணிக்குத் திரும்பினர். மும்பையில் உள்ள அரசு மருத்துவமனை பயிற்சி டாக்டர்களும் பணிக்குத் திரும்பியுள்ளனர்.