டெல்லியில் இருந்து துபாய்க்கு 150 பயணிகளுடன் சென்ற ஸ்பைஸ்ஜெட் எஸ்.ஜி-11 விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியது.
இந்த நிலையில், இது குறித்து ஸ்பைஸ்ஜெட் நிறுவன செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது, ``விமானத்தின் இண்டிகேஷன் லைட் செயலிழந்ததால் கராச்சிக்கு திருப்பி விடப்பட்டது.

விமானம் கராச்சியில் பாதுகாப்பாக தரையிறங்கியது. மேலும் பயணிகள் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர். அவசரநிலை எதுவும் அறிவிக்கப்படவில்லை, விமானம் சாதாரணமாக தரையிறக்கப்பட்டது. பயணிகளுக்கு குளிர்பானம் வழங்கப்பட்டது. விமானத்தில் வேறு கோளாறு ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை. பயணிகளை துபாய்க்கு அழைத்துச் செல்லும் மாற்று விமானம் கராச்சிக்கு அனுப்பட்டுள்ளது” என்றார்.
