Published:Updated:

`பீட்சா டெலிவரி பாய்க்கு கொரோனா!' -டெல்லியில் தனிமைப்படுத்தப்பட்ட 73 குடும்பங்கள்

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

உணவகத்தில் இவருடன் பணியாற்றிய 17 பேர், இவருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளன.

டெல்லியில் உள்ள ஓட்டலில் இருந்து, பல்வேறு இடங்களுக்கு பீட்சா டெலிவரி செய்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவருடன் தொடர்பில் இருந்த 73 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

டெல்லி
டெல்லி
விகடன்

உலகம் முழுவதும் உள்ள கொரொனா அச்சுறுத்தலுக்கு, பல வல்லரசு நாடுகளும், நோய்த்தொற்றுக்கு ஆட்டம் கண்டுள்ள நிலையில், தற்போது இந்தியாவில் இந்த நோய்த் தொற்று தீவிரமடைந்துவருகிறது. இதில், இந்தியாவில் மட்டும் 12,380 பேர் நோய்த் தொற்று காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 414 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில், தலைநகர் டெல்லியில் மட்டும் இதுவரை 1,578 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 32 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்தச் சூழலில், டெல்லியில் உள்ள மால்வியா நகரில் ஓர் உணவகத்தில் பணிபுரிந்துவந்த 19 வயதுடைய நபர் ஒருவருக்கு, உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவரை அரசு ஆர்.எம்.எல் மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதனை செய்ததில், அவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து, இவர் மூலமாக மற்றவர்களுக்கு நோய் பரவியிருக்கலாம் என்று சந்தேகமடைந்த சுகாதாரத்துறை அதிகாரிகள், இவருடைய தொடர்பில் இருந்தவர்கள் குறித்து விசாரித்துள்ளனர். அதில், கடந்த 15 நாள்களில் தெற்கு டெல்லி மாலவியா நகரில் ஹவுஸ் காஸ், மாலவியா நகர், சாவித்திரி நகர் உள்ளிட்ட பகுதிகளில் டெலிவரி செய்திருப்பது தெரியவந்துள்ளது. டெலிவரி கொடுக்கப்பட்ட 73 குடும்பங்களும், தற்போது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக, டெல்லி மாவட்ட ஆட்சியர் பி.எம். மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு
கொரோனா ஊரடங்கு
விகடன்

மேலும், அந்த உணவகத்தில் இவருடன் பணியாற்றிய 17 பேர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையில், உணவகத்தின் சார்பில் 'அரசின் வழிகாட்டுதல்படி நாங்கள் உணவகத்தை மூடியுள்ள நிலையில், இந்த நபர் எப்படி வாடிக்கையாளர்களின் டெலிவரி தொடர்பில் இருந்தார் என்று தெரியவில்லை. இருப்பினும் அந்த ஊழியருக்கு எங்களுடைய அனைத்து உதவியும் இருக்கும்' என்று தெரிவித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு