Published:Updated:

கொல்லப்பட்டது தன் மகள் என அறியாமல் பார்த்துக்கொண்டிருந்த தாய்; உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்!

death
death ( Representational image )

தாக்குதல் நடக்கும் இடத்தில் இருந்து சற்று தொலைவில் இருந்ததால் தாக்குதலுக்கு உள்ளானது தன் மகள் என்று அவருக்குத் தெரியவில்லை.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாட்டில் அதிகரித்து வரும் நிலையில், தன் பதின்ம வயது மகள் துரத்தப்பட்டு கொல்லப்படுவதை, அது தன் மகள் என்பதை அறியாமலேயே தாய் பார்த்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் மோதி பாக் பகுதியைச் சேர்ந்த 15 வயதுச் சிறுமி, தன் பெற்றோர் மற்றும் இரண்டு சகோதரர்களுடன் வாழ்த்து வந்தார். டேக்வாண்டோ மற்றும் தற்காப்பு கலைகளில் அச்சிறுமி பயிற்சி பெற்று வந்துள்ளார்.

மறுநாள் சிறுமியின் பிறந்தநாள் என்பதால், சிறுமியின் வீட்டினர் அவரை சர்ப்ரைஸ் செய்வதற்காக ஏற்பாடு செய்துள்ளனர். இந்த நிலையில், அன்று வீட்டுக்கு வெளியே பால்கனியில் துணிகளை உலர்த்த வந்த சிறுமியின் தாய், தன் வீட்டின் அருகிலுள்ள பூங்காவில் ஒரு பெண்ணை ஒருவன் துரத்தியபடி அடிக்கும் கட்சியைப் பார்த்துள்ளார்.

Girl child
Girl child
Pixabay
`இளம்பெண்ணிடம் அத்துமீறல்; தற்காப்பு முயற்சியில் கொலை!'- பெண்ணை விடுவித்த திருவள்ளூர் எஸ்.பி

ஆனால், அந்தத் தொலைவுப் பார்வையில், தாக்குதலுக்கு உள்ளாவது தன் மகள்தான் என்பதை அவர் அறியவில்லை. அந்த இளைஞன் அந்தச் சிறுமியை அடித்துத் துன்புறுத்தி, ஒரு கட்டத்தில் கொலை செய்திருக்கிறான். 21 வயது இளைஞன், 15 வயதுச் சிறுமியைக் கொலை செய்துள்ள இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கொலை செய்த இளைஞன், ஒரு வருடத்திற்கு முன்பு வெளியூரில் வேலை பார்த்து வந்துள்ளான். கொரோனா பொதுமுடக்கத்தால் வேலையை இழந்தவன், கடந்த எட்டு மாதங்களாகச் சிறுமியைப் பின்தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்ததாகக் குற்றம்சாட்டுகிறார் சிறுமியின் அப்பா. ``அதைப் பற்றி என் மகள் எங்களிடம் சொன்னதுடன், `எனக்குத் தொந்தரவு கொடுத்தால், அதற்கான விளைவை நீ சந்திக்க நேரிடும்' என்று அவனை எச்சரிக்கையும் செய்தாள். நாங்களும் அவனைக் கண்டித்தோம். அதில் இருந்து அவன் எந்தத் தொந்தரவும் செய்ததாகத் தெரியவில்லை.

சில வாரங்களுக்கு முன்னர் அவன் எங்கள் தெரு செக்யூரிட்டியுடன் அமர்ந்திருந்ததைப் பார்த்தபோது கூட, அதைப் பெரிதாக நான் எடுத்துக்கொள்ளவில்லை. அவன் மீது இதுவரை நாங்கள் போலீஸ் புகாரெல்லாம் கொடுக்கவில்லை, ஏனெனில் அவன் இத்துணை ஆபத்தானவனாக இருப்பான் என்று நாங்கள் நினைக்கவில்லை. ஆனால் இப்படி அவன் என் மகளைக் கொலை செய்வான் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. எங்களைப் பழிவாங்கவே அவன் இப்படி செய்திருக்கிறான்" என்று கதறுகிறார் சிறுமியின் அப்பா.

சிறுமியின் கொலைக்கு முக்கிய சாட்சி, சிறுமியின் அம்மாதான். ``வீட்டுக்கு வெளியே துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தேன். தூரத்தில், பூங்காவின் அருகே ஒரு பெண் ஒருவனால் துரத்தப்படுவதைக் கண்டேன். அவளைத் துரத்தியவன், அவளை அடித்து ஓடவிட்டது போல இருந்தது. அவன் அவளைத் துரத்தி அடித்துக் கொண்டிருந்தான். அவள் உதவிக்கு அழைத்திருக்கலாம், வலியில் கூச்சல் இட்டிருக்கலாம். ஆனால், அந்தச் சத்தம் எதுவும் எனக்குக் கேட்கவில்லை. அவள் என் செல்ல மகள் என்பதே எனக்குத் தெரியவில்லையே... அவளைக் காப்பாற்ற முடியவில்லையே...'' என்று கதறுகிறார் சிறுமியின் தாய்.

Murder
Murder
சென்னை:`` அவள் என் லவ்வர்; அவளுக்குத் தொல்லை கொடுக்காதே" - இளைஞரைக் கொலை செய்த கும்பல்!

கொலை செய்யப்பட்ட சிறுமி, தற்காப்புக் கலைகளைக் கற்றுத் தேர்ந்தவர். அந்த இளைஞர் பின் தொடர்ந்து தாக்கியபோது, தன்னைப் பாதுகாத்துக்கொள்ள தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் அவர் எடுத்தும், கோடரியால் பின்புறமிருந்து தாக்கப்பட்டு அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். ``குற்றவாளி நிச்சயம் தூக்கில் இடப்பட வேண்டும்' என்று அழுகிறார் சிறுமியின் அம்மா. சிறுமியின் 16-வது பிறந்தநாளுக்கு முந்தைய நாள் அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

கடந்த, ஜூலை 12-ம் தேதி கொலைசெய்து விட்டுத் தப்பி ஓடிய இளைஞனை, ஹரியானா பல்வாலில் உள்ள அவனது சகோதரி வீட்டில் கைது செய்துள்ளனர் போலீஸார்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முடிவு எந்த நூற்றாண்டிலோ?

- ஹரிணி ஆனந்தராஜன்

அடுத்த கட்டுரைக்கு