Published:Updated:

`900-ஐ தாண்டிய பாதிப்பு எண்ணிக்கை!’ - `ஸ்டேஜ் 3’ நடவடிக்கைக்கு தயாராகிறதா இந்தியா?! #Corona

கொரோனா
கொரோனா

வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இந்தியா ஸ்டேஜ் 3 நடவடிக்கைக்கு தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை இந்தியாவில் 900-ஐ தாண்டிவிட்டது. இறந்தவர்களின் எண்ணிக்கையும் 20 ஆக அதிகரித்துள்ளது. ஊரடங்கு உத்தரவு உட்பட வைரஸ் பரவலுக்கு எதிராக பல நடவடிக்கைகள் எடுத்தாலும் நாளுக்கு நாள் பாதிப்பின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரிக்க தொடங்கியுள்ளது அச்சத்தை ஏற்படுத்துகிறது. இதற்கிடையே, வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இந்தியா ஸ்டேஜ் 3 நடவடிக்கைக்கு தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மருத்துவர்களின் கூற்றுப்படி, கோவிட் -19 பரவல் மூன்று நிலைகளாக பிரிக்கப்பட்டு விவாதிக்கப்படுகின்றன. நிலை 1 என்பது வெளிநாடுகளில் இருந்து புலம்பெயர்பவர்களால் நோய் தொற்று ஏற்படுவதையும், இரண்டாம் நிலை அவர்கள் மூலமாக உள்ளூர் மக்களுக்கு தொற்று பரிமாற்றம் ஆவதை குறிப்பதாகும். இந்த எண்ணிக்கை அதிகரிப்பதே சமூக பரவல் அல்லது மூன்றாம் நிலை என வரையறுத்துள்ளனர்.

கொரோனா
கொரோனா

தற்போது இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் முதல் இரண்டு நிலைகளிலேயே உள்ளனர். வைரஸ் பாதித்த நாடுகளில் இருந்து வந்த நபர்களுக்குத் தான் பெரும்பாலும்கொரோனா தொற்று பாஸிட்டிவ் என வந்துள்ளது. அவர்களின் மூலமாக ஒரு சில உள்ளூர் மக்களுக்கும் பரவத் தொடங்கியதுள்ளது.

இது மேலும் பரவி சமூக பரவலாக அதிகரித்தால் நோயாளிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியாத நிலை உருவாகலாம். உள்ளூர் மக்கள் மூலமாக நோய் தொற்று சமூக பரவலாக அதிகரித்துவிடக் கூடாது என்பதற்காகவே, அரசு 21 நாள் ஊரடங்கை பிறப்பித்து மக்களை வீடுகளுக்குள் முடங்கியுள்ளது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை வரவேற்கப்படுகின்ற இந்த வேளையில், முன்னெச்சரிக்கையாக எது நடந்தாலும் தயாராக இருக்கும் வகையில் ஸ்டேஜ் 3 நடவடிக்கைக்கு தயார்படுத்தி வருகிறது இந்தியா.

`ஆன்லைன் கவுன்சிலிங்; ஒரேநாளில் 276 டாக்டர்கள் நியமனம்!' -பிளான் சி-யை கையிலெடுத்த கேரளா #corona

இந்தியாவில் முதல் மாநிலமாக டெல்லியில் ஏற்கனவே ஸ்டேஜ் 3 நடவடிக்கைக்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. மாநில அரசு அமைத்த 5 பேர் கொண்ட மருத்துவக் குழுவின் அறிக்கைப்படி இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளது கெஜ்ரிவால் அரசு. "தற்போது, ​​விஷயங்கள் அனைத்தும் கட்டுப்பாட்டில் உள்ளன.

ஆனால் பாதிப்பின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து நாம் நினைத்ததைவிட கூடிவிட்டால் எல்லாம் கையைவிட்டு போனதுபோல் ஆகிவிடும். அதனால்தான் எல்லா ஏற்பாடுகளுடனும் நாங்கள் தயாராக இருக்க வேண்டும். 5 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு - கொரோனா வைரஸ் பரவலின் 3 ஆம் கட்டத்திற்குள் நகரம் நுழைந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிக்கையாக சமர்ப்பித்துள்ளது” என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

Delhi CM Arvind Kejriwal
Delhi CM Arvind Kejriwal

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) படி, இந்தியா தற்போது நிலை 2 (உள்ளூர் பரிமாற்றம்) இல் உள்ளது. சமூக பரவல் எனப்படும் நிலை -3 இந்தியாவில் இன்னும் ஏற்படவில்லை. “வெளிநாடு பயண வரலாறு இல்லாமல் அவர்களுடன் நேரடி தொடர்பு இல்லாமல் கொரோனா பாதிப்பு வந்து அது அதிக எண்ணிக்கையில் வரத் தொடங்கினால் ​​நாங்கள் அதை சமூக பரவலின் தொடக்கமாக எடுத்துக்கொள்வோம். அப்படி யாருக்கும் இதுவரை தொற்று ஏற்படவில்லை என்பதை நிம்மதி தரும் செய்தி. அந்த வகையில், நாம் 3-ம் நிலையில் இல்லை எனலாம்.

ஒற்றை பார்ட்டி; ஜனாதிபதி டு எம்.பி வரை கொரோனா அச்சம்?! -பாலிவுட் பிரபலத்தால் கலங்கும் அரசியல்வாதிகள்

ஆனால் நாம் நிலை 3ல் இருப்பதைப் போல ஏற்பாடுகளைச் செய்வது நல்லது. சமூக பரவல் ஏற்பட்டால், எண்கள் அதிவேகமாக உயரத் தொடங்கும். அடுத்த சில நாட்களில் இந்தியா தனது சோதனை திறனை விரிவுபடுத்துகிறது. தனியார் ஆய்வகங்கள் தயாராக வைக்கப்பட உள்ளன. தனியார் மருத்துவமனைகளும், போதுமான எண்ணிக்கையிலான தனிமை வார்டுகளை உருவாக்கி எங்களுக்கு உதவ முன்வந்துள்ளன. இதுபோல பல நடவடிக்கைகளை துரிதமாக செய்து வருகிறோம்" என்று ஐசிஎம்ஆர் குழு மருத்துவர்கள் livemintக்கு பேசியுள்ளனர்.

Corona Screening, India
Corona Screening, India
AP / Channi Anand

ஸ்டேஜ் 3 நடவடிக்கையின்படி, நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் எமெர்ஜென்சி வார்டுகளைத் தவிர மற்ற வார்டுகள் அனைத்தும் கொரோனா தனிமை வார்டுகளாக மாற்றப்படும். மருத்துவமனை மட்டுமல்ல அரசின் மற்றகட்டடங்களும் மருத்துவமனைகளாக மாற்றப்படும். மேலும் தேவையான மருந்துகள் உள்ளிட்ட அனைத்தும் தயார் நிலையில் இருக்கும்படி பார்க்கப்படும். இந்தக் காலத்தை ஒரு மருத்துவ எமெர்ஜென்சி காலமாக கருதி போர்கால துரித நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

`சிக்கன், மட்டன் வேணும்னு கேக்குறாங்க!'- டிஎஸ்பி மகனால் நொந்துபோன அமைச்சர் #Corona
அடுத்த கட்டுரைக்கு