Published:Updated:

பெட்ரோல் விலை லிட்டருக்கு ₹8 குறைத்த டெல்லி அரசு; நள்ளிரவு முதல் அமல்!

Petrol
News
Petrol ( Photo: Vikatan / K.Rajesekaran )

பெட்ரோல், டீசலுக்கான வாட் வரியை சில மாதங்களுக்கு முன்பே குறைத்தது தமிழக அரசாங்கம். கடந்த நவம்பர் 4-ம் தேதியன்று, மத்திய அரசு கலால் வரியை பெட்ரோலுக்கு 5 ரூபாயும், டீசலுக்கு 10 ரூபாயையும் குறைத்தது.

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைக்கான வாட் வரி குறைக்கப்பட்டதைப் போலவே, தற்போது இந்திய தலைநகரான டெல்லியிலும் வாட் வரி (VAT) குறைக்கப்பட்டு பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.

Arvind Kejriwal
Arvind Kejriwal
Photo: Twitter / ArvindKejriwal

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பெட்ரோல், டீசலுக்கான வாட் வரியை சில மாதங்களுக்கு முன்பே குறைத்தது தமிழக அரசாங்கம். கடந்த நவம்பர் 4-ம் தேதியன்று, மத்திய அரசு கலால் வரியை பெட்ரோலுக்கு 5 ரூபாயும், டீசலுக்கு 10 ரூபாயையும் குறைத்தது. அதனைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி ஆளும் பல்வேறு மாநில அரசாங்கங்களும் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான வாட் வரியைக் குறைத்தன. இதனால், அத்தியாவசியத் தேவைகளான காய்கறிகள் விலை உயர்வது தடுக்கப்பட்டது.

இந்த நிலையில், பெட்ரோல் மற்றும் டீசலுக்கான வாட் வரியைக் குறைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை டெல்லி அரசுக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இதனைத் தொடர்ந்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் இன்று கூடிய கூட்டத்தில் டெல்லி மாநில அரசு வாட் வரியை 30 சதவிகிதத்தில் இருந்து 19.40 சதவிகிதமாகக் குறைக்க முடிவு மேற்கொண்டது.

பெட்ரோல்
பெட்ரோல்

இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவில் இருந்து அமலுக்கு வருகிறது. டெல்லியில் தற்போதைய பெட்ரோல் விலை ரூ.103.97. வரி குறைப்புக்கு பிறகு ரூ.94.14-ஆகக் குறைகிறது.

தற்போதைய நிலையில், இந்தியாவில் மெட்ரோ மாநகரங்களில் மும்பையில் மட்டுமே பெட்ரோல் விலையில் எந்த வரி குறைப்புமின்றி அதிகமாக இருந்து வருகிறது.

- நா.நிவேதா, மாணவ நிருபர்