Published:Updated:

`எங்களுக்கு கொரோனா வந்தால்..!’ - மருத்துவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மூவர்

மருத்துவர்கள்
மருத்துவர்கள்

கொரோனா வைரஸ், பெரும் கொடுமை... அந்த வைரஸுக்கு எதிராகப் போராடும் மருத்துவர்கள் பெருமதிப்புக்குரியவர்கள். ஆனால், அவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது மாதிரியான சம்பவங்கள் பெரும் கவலை அளிக்கக்கூடியதாக இருக்கிறது!

இந்தியாவில் கொரோனா தடுப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், மருத்துவர்கள் தாக்கப்படுவதும், புறக்கணிக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. பிரதமர் சொன்ன வார்த்தைக்காக கொரோனா தடுப்புப் பணியில் முன்வரிசையில் நின்று போரிடும் மருத்துவப் பணியாளர்களுக்கு மரியாதை செய்த அதே தேசத்தில், இன்று அதே மருத்துவ பணியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் ஏராளம்.

கொரோனா சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள்
கொரோனா சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியான மருத்துவரின் உடலை அடக்கம் செய்யக்கூட சில பகுதிகளில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நேற்று பிரதமர் தலைமையில்கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மருத்துவர்களைக் காக்க வேண்டியது அரசின் கடமை என்றும், இனியும் மருத்துவர்கள் மீதான தாக்குதலை அரசு பொறுத்துக்கொள்ளாது எனவும் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டதோடு, மருத்துவர்கள் தாக்கப்பட்டால் 7 ஆண்டுகள் வரை அவர்களுக்கு சிறைத்தண்டனை வழங்கும் வகையில் அவசர சட்டத்துக்கும் ஒப்புதல் வழங்கபட்டது.

மருத்துவப் பணியாளர்களைப் பாதுக்காக்க அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட அடுத்த நாளே டெல்லியில் மீண்டும் மருத்துவர்கள் மிக மோசமாக நடத்தப்பட்டிருக்கிறார்கள். சிறிது நேரம் காத்திருக்க சொன்னதற்காகச் சிலர் தங்களைத் தாக்கியதாகவும், மிக மோசமாக நடத்தப்பட்டதாகவும் வேதனை தெரிவிக்கிறார்கள் டெல்லி லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனை மருத்துவர்கள் ஊழியர்கள்.

இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள மருத்துவர்கள், அதில் இன்று அங்கு நடந்தவற்றை விவரித்தனர். ``நாங்கள் தினமும் காலை 9 மணி முதல் 12 மணி நேரம் பணி செய்கிறோம். நாங்கள் கொரோனா வார்டுகளுக்கு பலரை செக் செய்து அனுப்புகிறோம். ஆனால், இன்று மருத்துவமனைக் கட்டடத்தின் வெளியே ஒரு மோசமான சம்பவம் நடைபெற்றது. ஆம்புலன்ஸ் ஒன்று, ஒரு நோயாளி மற்றும் இருவரை மருத்துவமனைக்கு அழைத்து வந்தது.

அவர்கள் வந்த நேரம், மருத்துவமனை வளாகத்தில் இருந்த அனைத்து மருத்துவர்களும் வேறு நோயாளிகளைப் பார்த்துக்கொண்டு இருந்தனர். அதனால், புதிதாக வந்தவர்களைக் கொஞ்சம் காத்திருக்கச் சொன்னோம். ஆனால், அவர்கள் பொறுமை இல்லாதவர்களாக இருந்தனர். மருத்துவர்களிடம் சென்ற அவர், தங்கள் மாஸ்க்களை கழற்றிவிட்டு, மருத்துவருக்கு மிக நெருக்கமாக வந்தனர். மருத்துவர், அவர்களிடம் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கச் சொன்னபோது, அவர்கள் சத்தம் போட்டனர். அப்போது அவர்கள், `எங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால், உங்களுக்கும் பரப்பிவிடுவோம்’ என்று மிரட்டினார்கள்” என்றனர்.

`எங்களுக்கு கொரோனா வந்தால்..!’ - மருத்துவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மூவர்

தொடர்ந்து அவர்கள், ``மருத்துவர்கள் அவர்களைத் தள்ளி நிற்கச் சொல்லும்போது, அவர்கள் ஆக்ரோஷமாகத் தாக்க ஆரம்பித்தனர். மருத்துவரை தாக்கியது பெண் என்பதால், அங்கு பணியில் இருந்த பெண் காவலர்களை அழைத்தோம். அப்போது மற்றொருவர், பெண் காவலரின் கழுத்தைப் பிடித்து தள்ளினார். மேலும், மோசமான வார்த்தைகளால் அவர்கள் திட்டினர். மற்ற காவலர்களையும் அவர்கள் மோசமாகக் கையாண்டனர். நாங்கள் கொரோனாவுக்கு எதிராக மட்டுமல்லாமல், இது போன்ற நபர்களுக்கு எதிராகவும் போராடும் நிலையில் இருக்கிறோம். எங்கள் மருத்துவமனை கொரோனா தடுப்பில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால், வேலையைச் செய்வது எங்களுக்கு மிகவும் கடினமாகிவிடும்” என்றனர்.

மரணிக்கும் மருத்துவர்கள்... மரித்துப் போன மனிதம்... கொரோனாவால் தமிழகத்தின் முகம் மாறுகிறதா?

கொரோனா வைரஸ், பெரும் கொடுமை... அந்த வைரஸுக்கு எதிராகப் போராடும் மருத்துவர்கள் பெரு மதிப்புக்குரியவர்கள். ஆனால், அவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது மாதிரியான சம்பவங்கள் பெரும் கவலை அளிக்கக்கூடியதாக இருக்கிறது!

அடுத்த கட்டுரைக்கு