Published:Updated:

Youtuber பிறந்த நாள் கொண்டாட்டம்: டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் குவிந்த ஆயிரக்கணக்கானோர்!

தனது மனைவியுடன் கெளரவ்

டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் யூ டியூபரின் பிறந்தநாளைக் கொண்டாட ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Youtuber பிறந்த நாள் கொண்டாட்டம்: டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் குவிந்த ஆயிரக்கணக்கானோர்!

டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் யூ டியூபரின் பிறந்தநாளைக் கொண்டாட ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Published:Updated:
தனது மனைவியுடன் கெளரவ்

சமீப காலமாக யூடியூப் சேனல் தொடங்கி அதன் மூலம் சம்பாதிக்கத் தொடங்கிவிட்டனர். டெல்லியைச் சேர்ந்த யூடியூபர் கெளரவ் தனோஷா பிளையிங் பீஸ்ட் என்ற யூ டியூப் சேனலை நடத்தி வருகிறார். இவரது சேனலுக்கு 7.58 மில்லியன் பேர் வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர். இன்ஸ்டாகிராமில் 3 மில்லியனுக்கும் அதிகமானோர் இவரை பின் தொடர்கின்றனர். கெளரவ் மனைவி ரிதுவின் சேனலிலும் பல லட்சம் பேர் வாடிக்கையாளர்களாக இருப்பதோடு இன்ஸ்டாகிராமிலும் 1.6 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். நேற்று கெளரவ் தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

மெட்ரோ ரயில் நிலையத்தில் கூடிய கூட்டம்
மெட்ரோ ரயில் நிலையத்தில் கூடிய கூட்டம்

இதற்காக டெல்லி அருகில் உள்ள நொய்டா செக்டர் 51வது மெட்ரோ ரயில் நிலையத்தில் ஒரு மெட்ரோ ரயில் முழுக்க புக் செய்திருந்தனர். ரயிலில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்படும் என்றும், ஒரு மெட்ரோ ரயில் தான் புக் செய்ய முடிந்தது என்றும், ஆனாலும் அனைவரையும் சந்திப்போம் என்று ரிது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். பிறந்தநாள் கொண்டாடுவது குறித்து கணவன் மற்றும் மனைவி இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வரும் படி அழைப்பும் விடுத்திருந்தனர். அவர்களின் அழைப்பை ஏற்று ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வந்தனர். இதனால் மெட்ரோ ரயில் நிலையத்தில் போக்குவரத்து நெருக்கடி மற்றும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் மிகவும் சிரமப்பட்டனர். இதனால் கொரோனா விதிகளை மீறி கூட்டத்தை கூட்டியதாக கெளரவ் மனைவியை முதலில் நொய்டா போலீஸார் கைது செய்தனர். அதனை தொடர்ந்து கெளரவையும் கைது செய்தனர். இச்சம்பவத்தால் மெட்ரோ ரயில் நிலையத்தில் சில மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் சில மணி நேரத்தில் இருவரும் ஜாமீனில் வெளியில் வந்தனர். நேற்று நள்ளிரவில் கெளரவ் தனது குடும்ப புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு பிறந்தநாள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்திருந்தார். காரக்பூர் ஐஐடியில் சிவில் இன்ஜினீயரிங் முடித்துள்ள கெளரவ் 3 யூடியூப் சேனல் நடத்துகிறார். அதில் உடல் பிட்னஸ் செய்திகள், அன்றாட வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகள், நேரடி ஒளிபரப்பு போன்ற காரியங்களை செய்து வரும் கெளரவ் தற்போது டெல்லியில் சட்டம் படித்து வருகிறார்.