Published:Updated:

ட்விட்டர் மீது `போக்ஸோ' வழக்குப் பதிந்த டெல்லி காவல்துறை; என்ன காரணம்?

Twitter | ட்விட்டர்
Twitter | ட்விட்டர்

தொழில்நுட்ப வளர்ச்சி ஒருபக்கம் மனித குலத்திற்கு நன்மைகளை அள்ளித் தந்தாலும், மறுபக்கம் மனித மனங்களை சிதைத்துக்கொண்டுதான் இருக்கிறது.

சமூக வலைதளமான ட்விட்டர், தனது தளத்தில் குழந்தைகளின் ஆபாசப் படங்கள் மற்றும் சிறார் வதை சார்ந்த உள்ளடக்கங்களைக் கொண்டுள்ளதாக டெல்லி காவல்துறையின் சைபர் பிரிவு ட்விட்டர் நிறுவனம் மீது வழக்குப் பதிந்து முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளது. கடந்த மே மாதம் 21-ம் தேதி `தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்’(National Commission for Protection of Child Rights - NCPCR) இது குறித்த புகார் ஒன்றை அளித்ததன் தொடர்ச்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள்
குழந்தைகள்
`லேப்டாப்பிலேயே அவ்வளவு ஆபாசப் படங்கள்!' - சுஜி தங்கை புகாரால் சீறும் சிபிசிஐடி

போக்ஸோ மற்றும் ஐபிசி, ஐடி சட்டங்களின் கீழ்(IPC, IT ACT) புகார் மீதான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக டெல்லி காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் சின்மாய் பிஸ்வால் தெரிவித்திருக்கிறார்.

தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் சார்பாக இதன் தலைவர் பிரியங்க் கனூங்கோ இந்தப் புகாரைக் கொடுத்துள்ளார். வழக்கமான தேடு பொறியில் தென்படாத இணையதளங்கள் `டீப் வெப் அல்லது டார்க் வெப்’ (Deep Web or Dark Web) என்று அழைக்கப்படும். இதுபோன்ற 31 இணையதளங்கள் கண்டறியப்பட்டுள்ளன என்றும், இதில் மிக மிக மோசமான உள்ளடக்கங்கள் இருப்பதோடு குழந்தைகள் உட்பட அனைவருக்கும் இது சென்று சேரும் வண்ணம் இருப்பதாகவும் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்சொன்ன விஷயங்கள் அனைத்துமே ட்விட்டரிலும் இருக்கின்றன. குறிப்பாக, இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் பல லிங்க்குகள், அதாவது இணைப்புகள் அனைத்துமே எளிதில் ஒருவரைச் சென்று சேரும் வண்ணமே அமைந்துள்ளன என்று தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் குற்றம் சாட்டியிருக்கிறது. இதன் காரணமாக வெவ்வேறு ட்விட்டர் ஹேண்டில்களைப் பயன்படுத்தி இந்த லிங்க்குகளை எளிதில் பெற்றுவிடமுடியும் என்பது கவலையளிக்கும் ஒரு விஷயம் என்றும் அது தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளது.

Child Abuse
Child Abuse
புத்தம் புது காலை : ட்விட்டர், ஃபேஸ்புக், யூ-ட்யூப் நிறுவனர்கள் நமக்கு சொல்வது என்ன? #Socialmediaday

குறிப்பாக ட்விட்டர் ஹேண்டில்களிலிருந்து வாட்ஸ் அப் குழுக்களுக்கு லிங்க்குகளை அனுப்பும் வசதியும் இருப்பதால் குழந்தைகளின் ஆபாச படங்கள் எளிதில் ஒருவரால் பெறப்படுகின்றன. டீப் வெப் மற்றும் டார்க் வெப்களின் இணையதளங்களுக்கான டூல்-கிட் (Tool kit) ட்விட்டரிலேயே இருக்கிறது என்பதால் குழந்தைகள் உட்பட எல்லோராலும் இதுபோன்ற ஆபாச வீடியோக்களைப் பெற்றுவிடமுடியும் என்றும் அந்தப் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் 13 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் ட்விட்டர் தளத்தைப் பயன்படுத்தவும் அதிலிருந்து தகவல்களை எடுக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவும் போக்ஸோ சட்டத்தை மீறும் ஒரு செயலே என்றும் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தனது மனுவில் தெளிவுபடுத்தியிருக்கிறது.

இதற்கிடையில் குழந்தைகள் ஆணையம் இதுகுறித்து ட்விட்டர் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டிருக்கிறது.

ட்விட்டர் இந்தியாவின் செய்தித் தொடர்பாளர் இதுகுறித்து கூறுகையில்,``குழந்தைகள் பாலியல் சுரண்டலுக்கு ஆளாகாமல் தடுப்பதற்குத் தேவையான செயல்திறன் மிகுந்த அணுகுமுறைகளை நாங்கள் எங்களது சேவையில் செயல்படுத்தி வருகிறோம்.

Twitter
Twitter
STEPHEN LAM

ட்விட்டரின் விதிமுறைகளை மீறும் உள்ளடக்கங்களை உடனடியாகக் கண்டறிந்து அதனை நீக்குவதற்குத் தேவையான செயல்திறன் மிகுந்த முன்னெடுப்புகளையும் நாங்கள் தொடர்ந்து செய்ய இருக்கிறோம். அதுமட்டுமல்லாமல் சட்ட அமைப்புகள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து இந்தப் பிரச்னையைக் கையாள இருக்கிறோம்” எனத் தெரிவித்திருக்கிறார்.

``இவை அனைத்திற்கும் மேலாக எழுத்து வடிவத்திலோ, படமாகவோ, வீடியோவாகவோ, கணினியில் வரையப்பட்ட படங்களாகவோ அல்லது வேறு எந்த வடிவில் இருந்தாலும், குழந்தைகள் தொடர்பான பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கங்கள் அனைத்துமே பார்ப்பதற்கும், பகிர்வதற்கும் ட்விட்டர் சேவையில் தடை விதிக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு