Published:Updated:

நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு டெல்லி போலீஸார் மூன்றாவது சம்மன்: ஆஜராக மறுப்பதால் விரைவில் கைது?!

ஜாக்குலின் பெர்னாண்டஸ்

மிரட்டிப் பணம் பறித்த வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு டெல்லி போலீஸார் மூன்றாவது முறையாக சம்மன் அனுப்பியிருக்கின்றனர்.

நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு டெல்லி போலீஸார் மூன்றாவது சம்மன்: ஆஜராக மறுப்பதால் விரைவில் கைது?!

மிரட்டிப் பணம் பறித்த வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு டெல்லி போலீஸார் மூன்றாவது முறையாக சம்மன் அனுப்பியிருக்கின்றனர்.

Published:Updated:
ஜாக்குலின் பெர்னாண்டஸ்

டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மிரட்டிப் பணம் பறித்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

அதாவது, டெல்லி தொழிலதிபர் ஒருவர் சிறையில் இருந்தார். அவரை விடுவிக்க உதவுவதாகவும், தான் பிரதமர் அலுவலக அதிகாரி என்றும் கூறி தொழிலதிபர் மனைவியிடம் இப்பணத்தை வசூலித்தார் சுகேஷ் சந்திரசேகர். இதற்கு அவரின் மனைவி லீனா துணையாக இருந்தார். இவ்வழக்கில் அமலாக்கப் பிரிவு தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார். சுகேஷ் சந்திரசேகரின் குற்றப் பின்னணி குறித்து தெரிந்திருந்தும் அவரிடமிருந்து ரூ.7 கோடிக்கும் அதிகமான பரிசுப்பொருள்களை ஜாக்குலின் பெர்னாண்டஸ் வாங்கியிருப்பதாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜாக்குலினுக்கு மட்டுமல்லாமல் அவரின் குடும்பத்தினருக்கும் சுகேஷ் சந்திரசேகர் அதிக அளவில் பண உதவி செய்திருப்பது தெரியவந்துள்ளது. இவ்வழக்கை டெல்லி போலீஸாரும் விசாரித்துவருகின்றனர்.

நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு டெல்லி போலீஸார் மூன்றாவது சம்மன்: ஆஜராக மறுப்பதால் விரைவில் கைது?!

சுகேஷ் சந்திரசேகரிடம் பரிசுப்பொருள்களைப் பெற்ற நடிகை நோரா பஹேதியிடம் ஏற்கெனவே டெல்லி போலீஸார் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஆறு மணி நேரம் விசாரணை நடத்தினர். அதோடு நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கும் கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி, செப்டம்பர் 12-ம் தேதிகளில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பினர். ஆனால் இரண்டு சம்மன்களுக்கும் ஜாக்குலின் ஆஜராகவில்லை. வேலையில் பிஸியாக இருப்பதால் தன்னால் ஆஜராக முடியவில்லை என்று தெரிவித்தார்.

இதையடுத்து நாளை விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி போலீஸார் மூன்றாவது முறையாக ஜாக்குலினுக்கு சம்மன் அனுப்பியிருக்கின்றனர். இந்த சம்மனுக்கு ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆஜராகாத பட்சத்தில் அவரை டெல்லி போலீஸ் கைதுசெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜாக்குலின் பெர்னாண்டஸுக்காக சுகேஷ் தனி விமானமே ஏற்பாடு செய்திருந்தார். ஜாக்குலினை மும்பையிலிருந்து தனி விமானத்தில் சென்னைக்கு அழைத்து சுகேஷ் பேசியிருந்தார். சிறையில் இருந்துகொண்டே சுகேஷ், நடிகை ஜாக்குலினிடம் வீடியோ காலில் பேசுவதை வழக்கமாகக்கொண்டிருந்தார்.