Published:Updated:

`மதம் தெரியல; என் பிள்ளைகளாகவே பார்த்தேன்!’ - டெல்லி வன்முறையில் மக்களைக் காத்த சீக்கியர்கள்

மொஹிந்தர் சிங்

டெல்லியில் இப்போது நடந்த இந்தக் கலவரம் என்னை பழைய நினைவுகளுக்கு அழைத்துச் சென்றுவிட்டது.

`மதம் தெரியல; என் பிள்ளைகளாகவே பார்த்தேன்!’ - டெல்லி வன்முறையில் மக்களைக் காத்த சீக்கியர்கள்

டெல்லியில் இப்போது நடந்த இந்தக் கலவரம் என்னை பழைய நினைவுகளுக்கு அழைத்துச் சென்றுவிட்டது.

Published:Updated:
மொஹிந்தர் சிங்

தலைநகர் டெல்லி பற்றி எரிந்த வேளையில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் 70-க்கும் மேற்பட்ட மக்களை மீட்டு பாதுகாப்பு வழங்கிய சீக்கிய மதத்தைச் சேர்ந்த இருவரின் செயல்கள் இன்னும் இந்த மண்ணில் மனிதநேயம் எஞ்சியிருக்கிறது என்பதைக் காட்டுவதாக அமைந்துள்ளது.

டெல்லி கலவரம்
டெல்லி கலவரம்

வடகிழக்கு டெல்லியில் இந்து மக்கள் அதிகம் வசிக்கும் கோகுல்புரி பகுதியில் வன்முறைச் சம்பவங்கள் கட்டுக்கடங்காமல் இருந்துள்ளது. இதையடுத்து, அங்கு வசித்து வந்த 70-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் வன்முறையாளர்களுக்கு பயந்து ஆங்காங்கே பதுங்கியிருந்தனர். இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் கர்தம்புரி பகுதிக்குச் சென்றால் பாதுகாப்பாக இருக்கலாம் என முடிவு செய்துள்ளனர். ஆனால், இங்கிருந்து கும்பலாக வெளியில் செல்வது ஆபத்து என உணர்ந்த அந்த மக்கள் ஆங்காங்கே பதுங்கியிருந்தனர். கோகுல்புரி பகுதியில் இருந்த அந்த மக்களை சீக்கிய மதத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் பத்திரமாகக் கொண்டு சேர்த்துள்ளனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மொஹிந்தர் சிங், அவரின் மகன் இந்தர்ஜித் சிங் இருவரும் தங்களது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று விட்டுள்ளனர். இதுகுறித்துப் பேசிய மொஹிந்தர் சிங், ``டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக 1984-ம் ஆண்டு கலவரம் நடந்தபோது எனக்கு 13 வயது. டெல்லியில் இப்போது நடந்த இந்தக் கலவரம் என்னை பழைய நினைவுகளுக்கு அழைத்துச் சென்றுவிட்டது. பிப்ரவரி 24-ம் தேதி மாலை கோகுல்புரி வீதிகளில் `ஜெய் ஸ்ரீராம்' கோஷங்களைக் கேட்க முடிந்தது. முதலில் ஒரு சிலர் மட்டுமே வீதிகளில் சுற்றிக்கொண்டிருந்தனர். சற்று நேரத்தில் நிறைய நபர்களை அங்கே பார்க்க முடிந்தது. நிலைமை கட்டுக்குள் இல்லை என்பதைப் புரிந்துகொண்டேன்.

டெல்லி கலவரம்
டெல்லி கலவரம்
AP

இந்து, முஸ்லிம் என நான் யாரையும் பிரித்துப் பார்க்கவில்லை. நான் அங்கு மக்களைப் பார்த்தேன். சின்னச் சின்ன குழந்தைகளைப் பார்த்தேன். அவர்களை என்னுடைய குழந்தைகளாக நினைத்தேன் அவர்களுக்கு எதுவும் நடந்துவிடக் கூடாது என்ற எண்ணம் மட்டுமே எனக்கு இருந்தது. நாம் அனைவரும் மனிதாபிமானத்தோடு செயல்பட வேண்டும். உதவி தேவைப்படுவர்களுக்கு உதவ வேண்டும் என்பதைவிட வேறு என்ன நான் சொல்வது.

இந்த இரண்டு பகுதிகளுக்கும் சுமார் அரைகிலோமீட்டருக்கு மேல் தொலைவு இருக்கும். என் மகனிடம் ஒரு புல்லட் இருந்தது. நான் ஸ்கூட்டி வைத்திருந்தேன். அங்கிருந்தவர்களைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்த ஒரு மணி நேரம் ஆனது. பெண்கள் குழந்தைகளை நான்கு பேராக வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றோம். ஆண்களை இரண்டு நபர்களாக ஏற்றிக்கொண்டோம். தாடி வைத்திருந்த இஸ்லாமிய ஆண்களுக்கு தலையில் டர்பன் அணிவித்து அழைத்து வந்தோம். அந்த மக்களைப் பாதுகாப்பாக விட்டுவிட்டு மீண்டும் கோகுல்புரி பகுதிக்கு விரைந்தேன். கலவரக்காரர்கள் அங்கிருந்த இஸ்லாமியர்களின் வீடு மற்றும் கடைகளைத் தீ வைத்து எரிக்க முயன்றனர். நான் அவர்களைத் தடுக்க முயன்றேன். ஆனால், அவர்கள் நான் கூறுவதைக் கேட்பதாக இல்லை. அவர்கள் எல்லாம் வெளியிலிருந்து வந்தவர்கள். அவர்கள், கடைகளை எரிப்பதிலும் கொள்ளையடித்துச் செல்வதிலுமே குறியாக இருந்தனர். அவர்களது அடுத்த இலக்கு என்னவென்று தெரியாமல் பயத்துடன் இருந்தேன்” என்றார்.

டெல்லி கலவரம்
டெல்லி கலவரம்
AP

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் கடந்த இரண்டு மாதங்களாக அமைதியான முறையில் போராட்டங்கள் நடந்துவந்த நிலையில், கடந்தவாரம் இருதரப்பினருக்குமிடையே வன்முறை வெடித்தது. டெல்லி வீதிகள் சூறையாடப்பட்டன. வன்முறைச் சம்பவத்துக்கு இதுவரை 30-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் அதிகமானவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வன்முறை சம்பவத்தில் போலீஸ்காரர்கள் இருவரும் கொல்லப்பட்டனர்.