Published:Updated:

அலுவலகங்களுக்கு அதிக வாடகை - உலகளவில் டெல்லி கனாட் பிளேஸ் பகுதிக்கு 9-வது இடம்!

எம்.குமரேசன்

கடந்த ஆண்டு 9-வது இடத்தில் இருந்த டெல்லியின் கனாட் பிளேஸ் மீண்டும் அதே இடத்தைப் பிடித்துள்ளது.

டெல்லி கனாட் பிளேஸ்
டெல்லி கனாட் பிளேஸ்

அலுவலகங்களுக்கு அதிக வாடகை செலுத்த வேண்டிய பகுதிகளில் டெல்லி கனாட் பிளேஸ் உலகளவில் 9- வது இடத்தில் உள்ளது. இங்கு ஆண்டுக்கு ஒரு சதுர அடிக்கு 144 யு.எஸ் டாலர் வாடகையாகச் செலுத்த வேண்டும். Global Prime Office Occupancy Costs survey வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில் முதலிடத்தில் ஹாங்காங் நகரின் சென்ட்ரல் டிஸ்ட்ரிக்ட் பகுதி உள்ளது. இங்கு ஆண்டுக்கு 322 அமெரிக்க டாலர்கள் வாடகையாக ஒரு சதுர அடிக்கு பெறப்படுகிறது.

பாந்திரா குர்லா காம்ப்ளக்ஸ்
பாந்திரா குர்லா காம்ப்ளக்ஸ்

லண்டன் வெஸ்ட் என்ட் பகுதி இரண்டாவது இடத்தையும் ஹாங்காங்கின் காவ்லுன் பகுதி மூன்றாவது இடத்தையும் நியூயார்க் நகரின் மிட்டவுன் மன்ஹட்டன் 4-வது இடத்தையும் பிடித்துள்ளன. சீனத் தலைநகர் பீஜிங்கில் உள்ள ஃபினான்ஸ் ஸ்ட்ரீட் 5- வது இடத்தில் உள்ளது. பீஜிங் நகரின் சென்ட்ரல் பிசினஸ் டிஸ்ட்ரிக்ட் பகுதி 6-வது இடத்தைப் பிடித்துள்ளது. நியூயார்க் நகரின் மிட்டவுன் சவுத் மன்ஹட்டன் 7-வது இடத்திலும் டோக்கியோ நகரின் மருனோச்சி ஒட்டமாச்சி பகுதி 8-வது இடத்திலும் உள்ளன.

இந்தியாவைப் பொறுத்தவரை, டெல்லியின் மத்திய பகுதியில் உள்ள கனாட் பிளேஸ் கடந்த ஆண்டும் 9-வது இடத்தில்தான் இருந்தது. அடுத்ததாக மும்பையில் உள்ள பாந்திரா- குர்லா காம்ப்ளக்ஸ் பகுதி 27-வது இடத்தில் உள்ளது. இங்கு ஆண்டுக்கு ஒரு சதுர அடிக்கு 90.67 யு.எஸ் டாலர்கள் வாடகை.

மும்பை நரிமன் பாயின்ட்
மும்பை நரிமன் பாயின்ட்

நரிமன்பாயின்ட் பகுதியில் ஒரு சதுர அடிக்கு 68.38 வாடகையாகச் செலுத்த வேண்டும். மும்பையின் முக்கிய அடையாளமான நரிமன்பாயின்ட் பகுதி உலகளவில் 40- வது இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள பகுதிகளில் முதல் 10 இடத்துக்குள் இடம் பிடித்துள்ள 6 பகுதிகள் ஆசியாவில் உள்ளன.