Published:Updated:

புற்றுநோயுடன் எழுதிய SSC தேர்வு; 81.60% மதிப்பெண் பெற்ற மாணவி உயிரிழப்பு; சோகத்தில் பெற்றோர்!

திவ்யா பவலே.

புற்றுநோய் பாதிப்பால் இறப்பின் விளிம்பில் இருந்தபோதும்கூட நம்பிக்கையைக் கைவிடாமல் சிரித்த முகத்துடன் வாழ்வை எதிர்கொண்ட திவ்யா பவலே...

புற்றுநோயுடன் எழுதிய SSC தேர்வு; 81.60% மதிப்பெண் பெற்ற மாணவி உயிரிழப்பு; சோகத்தில் பெற்றோர்!

புற்றுநோய் பாதிப்பால் இறப்பின் விளிம்பில் இருந்தபோதும்கூட நம்பிக்கையைக் கைவிடாமல் சிரித்த முகத்துடன் வாழ்வை எதிர்கொண்ட திவ்யா பவலே...

Published:Updated:
திவ்யா பவலே.

திவ்யா பவலே... 16 வயதான இவர் மகாராஷ்டிராவின் தானேவில் உள்ள மாஜிவாடா எனும் பகுதியைச் சேர்ந்தவர். கடந்த ஏப்ரல் 2021-ல் இவருக்கு T-cell lymphoma புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். பத்தாம் வகுப்புப் படித்து வந்த அவர் மருத்துவச் சிகிச்சை பெற்று வந்த காரணத்தால் வகுப்புகளுக்குச் செல்ல முடியவில்லை. இருப்பினும் மனம் தளராத திவ்யா, கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்புத் தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுதினார். தேர்வின் இடையில் கிடைத்த விடுமுறைகளைப் பயன்படுத்திக் குறுகிய காலத்தில் தேர்வுக்குப் படித்து 81.60% சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார்.

திவ்யா பவலே.
திவ்யா பவலே.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த போதும் மனம் தளராமல் தேர்வில் பங்கேற்று 81.60% சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற திவ்யாவிற்குப் பாராட்டுக்கள் குவிந்தன. இந்நிலையில் நீண்ட நாட்கள் சிகிச்சைப் பெற்று வந்த திவ்யா பவலே ஆகஸ்ட் 1ம் தேதி அன்று உயிரிழந்தார். இது குறித்து அவரது பள்ளி நிர்வாகம் "அவள் ஒரு மகிழ்ச்சியான-அதிர்ஷ்ட பெண். நோய் வாய்ப்பட்டிருந்தாலும் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார். கடந்த சில நாட்களாக நோயின் தீவிரம் அதிகமானது. இதன் காரணமாக அவர், திங்கள்கிழமை மாலை காலமானார்" என்று வருத்தத்துடன் கூறியுள்ளது. புற்றுநோய் பாதிப்பால் இறப்பின் விளிம்பில் இருந்தபோதும்கூட நம்பிக்கையைக் கைவிடாமல் சிரித்த முகத்துடன் வாழ்வை எதிர்கொண்ட திவ்யா பவலேவின் இந்த சோகச் செய்தி அவரது குடும்பத்தினர், ஆசிரியர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!