Published:Updated:

`தலையில் எச்சில் துப்புவது கண்டிக்கத்தக்கது!'- ஜாவித் வைரல் வீடியோ குறித்து மருத்துவர்

ஜாவேத்
News
ஜாவேத்

``எச்சிலில் பல நுண் கிருமிகள் இருக்கும். சளி இருக்கும் ஒருவரின் எச்சிலில் கிருமிகளும் இருக்கும் என்பதால் கொரோனா அல்லாத பிற நோய்க்கிருமிகளும் எளிதாகப் பரவும் வாய்ப்புள்ளது. அதே போன்று ஒருவர் தும்மும்போது, மூக்கு, வாயிலிருந்து தெறிக்கும் சளித்திவலைகள் மூலம் நோய்க்கிருமி பரவும்."

ஜாவித் ஹபீப் என்பவர் உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல சிகை அலங்காரக் கலைஞர். இவர் மற்ற சிகை அலங்கார கலைஞர்களுக்குப் பயிற்சி வழங்கிய போது, ``சிகை அலங்காரம் செய்ய தண்ணீர் இல்லை என்றால், தண்ணீருக்கு பதில் எச்சிலைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் தண்ணீரை மிச்சப்படுத்தலாம். மேலும், எச்சிலில் நிறைய சத்துகள் இருக்கின்றன" என்று கூறி, சிகை அலங்காரம் செய்ய அமர்ந்திருந்தவரின் தலையில் எச்சிலை உமிழ்ந்து சிகை அலங்காரம் செய்துள்ளார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஜாவிதின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. நெட்டிசன்கள் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ``நான் நகைச்சுவையாகதான் செய்தேன். என் செயலுக்கு வருந்துகிறேன்" என்று மன்னிப்பு கோரியிருந்தார். எனினும் கொரோனா தொற்றுப் பரவல் அதிகமாகி வரும் சூழலில் ஜாவிதின் பொறுப்பற்ற செயலுக்கு மக்கள் பலரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். உத்தரப்பிரதேசம் மாநிலம் காவல்நிலையத்தில் ஜாவிதின் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொது இடங்களில் ஒவ்வொருவரும் எவ்வளவு பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற தகவலை வழங்குகிறார் பொதுநல மருத்துவர் ராஜேஷ்.

``கொரோனா, ஒமிக்ரான் போன்ற வைரஸ் தொற்றுகள் பரவி வரும் சூழலில், ஒவ்வொருவரும் பொறுப்புடன் நடந்து கொண்டால் மட்டுமே, தொற்றில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ளமுடியும்.

பொதுநல மருத்துவர் ராஜேஷ்
பொதுநல மருத்துவர் ராஜேஷ்

சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, முகக்கவசம் அணிவது, சானிடைசர் பயன்படுத்துவது போன்றவை பொதுவாக சொல்லப்பட்டாலும், பொது இடங்களில் தும்முவது, எச்சில் துப்புவது போன்றவற்றில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.

எச்சிலில் பல நுண் கிருமிகள் இருக்கும். சளி இருக்கும் ஒருவரின் எச்சிலில் கிருமிகளும் இருக்கும் என்பதால் கொரோனா அல்லாத பிற நோய்க்கிருமிகளும் எளிதாகப் பரவும் வாய்ப்புகள் அதிகம். அதே போன்று ஒருவர் தும்மும்போது, மூக்கு, வாயிலிருந்து தெறிக்கும் சளித்திவலைகள் மூலம் நோய்க்கிருமி பரவும். எனவே சமூக நலன் மீது அக்கறை கொண்டு, தும்மும் போது மிக கவனமாக கைக்குட்டையை மூக்கில் மூடி தும்முங்கள்.

பொது இடங்களில் எச்சில் துப்புவதை அவசியம் தவிர்க்க வேண்டும். ஜாவித் நகைச்சுவைக்காகச் செய்தேன் என்று கூறினாலும், அவரின் செயல் உண்மையில் கண்டிக்கத்தக்கது" என்று கூறினார்.