Published:Updated:

`மருத்துவமனை விளம்பரத்தில் கடவுள் படம்?’- மத உணர்வைப் புண்படுத்தியதாகத் தாக்கப்பட்ட மருத்துவர்

கிளீனிக்குக்குச் சென்று, மருத்துவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். பின்னர், வீதியில் முழங்காலிட்டு மன்னிப்புக் கேட்கும்படியும் மிரட்டியுள்ளனர்.

மருத்துவர்
மருத்துவர்

ஒடிசாவில் மத உணர்வை புண்படுத்தியதாகக் கூறி மருத்துவர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிளீனிக்
கிளீனிக்

ஒடிசாவில், நபரன்பூரிலுள்ள ஜரிகானைச் சேர்ந்த மருத்துவர் பவடோஷ் மண்டல். இவர், எஸ்.டி.டி (பாலியல் தொடர்பான மருத்துவமனை) நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் ஆயுர்வேத கிளீனிக் ஒன்றை நடத்தி வருகிறார். தன்னுடைய கிளீனிக்கின் விளம்பரத்துக்கான போஸ்டரில் ராதா, கிருஷ்ணாவின் புகைப்படத்தை இவர் பயன்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியது. குறிப்பிட்ட மதத்தினருக்கு மன அளவில் பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் கூறுகின்றனர்.

இந்நிலையில், பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த சிலர் பவடோஷின் கிளீனிக்குக்குச் சென்று அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மருத்துவமனையின் உள்ளே சென்று அவரைக் கடுமையாகத் தாக்கிய அந்தக் கும்பல் வீதிக்கு இழுத்து வந்து அடித்து உதைத்தனர். பொதுமக்கள் முன்னிலையில் வீதியில் முழங்காலிட்டு மன்னிப்புக் கேட்கும்படியும் மிரட்டியுள்ளனர். வேறு வழியில்லாமல் மருத்துவர் பவடோஷ் முழங்காலிட்டு மன்னிப்பும் கேட்டுள்ளார்.

ஒடிசா காவல்துறை
ஒடிசா காவல்துறை

இந்தச் சம்பவம் முழுவதும் செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களிலும் வைரலாகப் பரவியது. ஆனால், இதுதொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு எதுவும் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளனர்.