Published:Updated:

தீராத வலி; வயிற்றுக்குள் `7 இன்ச்' பாட்டில்... ஸ்கேன் செய்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

அறுவை சிகிச்சை

மேற்கு வங்க மாநிலத்தில் இளைஞர் ஒருவரின் வயிற்றிலிருந்து ஏழரை இன்ச் அளவுள்ள சென்ட் பாட்டிலை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியிருக்கிறார்கள் மருத்துவர்கள்.

தீராத வலி; வயிற்றுக்குள் `7 இன்ச்' பாட்டில்... ஸ்கேன் செய்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

மேற்கு வங்க மாநிலத்தில் இளைஞர் ஒருவரின் வயிற்றிலிருந்து ஏழரை இன்ச் அளவுள்ள சென்ட் பாட்டிலை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியிருக்கிறார்கள் மருத்துவர்கள்.

Published:Updated:
அறுவை சிகிச்சை

மேற்கு வங்க மாநிலத்தில் இயங்கிவரும் பர்த்வான் மருத்துவக் கல்லூரிக்கு கடந்த வாரம் புதன்கிழமை 27 வயது இளைஞர் ஒருவர் வயிற்றுவலி காரணமாக சிகிச்சைக்கு மருத்துவரை அணுகியிருக்கிறார். என்ன காரணத்துக்காக வயிற்று வலி ஏற்பட்டது என்பதை கண்டறிவதற்காக, மருத்துவர்கள் சில மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டிருக்கின்றனர்.

அப்போது அதிர்ச்சியளிக்கும் விதமாக, அந்த இளைஞரின் வயிற்றில் ஏழரை இன்ச் அளவிலான சென்ட் பாட்டில் இருப்பது தெரியவந்தது. அவ்வளவு பெரிய பாட்டில் எப்படி வயிற்றுக்குள் போனது என்று குழம்பிப்போன மருத்துவர்கள், இளைஞரின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்ததால், உடனடியாக அந்த பாட்டிலை அகற்றுவதற்காக அறுவை சிகிச்சை செய்தனர். அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக முடிய ஏழரை இன்ச் சென்ட் பாட்டிலை அந்த இளைஞரின் வயிற்றிலிருந்து அகற்றி, அவர் உயிரை மருத்துவர்கள் காப்பாற்றினார்கள்.

மருத்துவம்
மருத்துவம்

இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய மருத்துவர்கள், ``வயிற்று வலி என வந்த நோயாளியின் வயிற்றுக்குள் சென்ட் பாட்டில் எப்படி போனது எனத் தெரியவில்லை. கிட்டத்தட்ட 20 நாள்களுக்கு முன் மலக்குடல் வழியாக அந்த பாட்டில் உட்செலுத்தப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கிறோம். அதன் பிறகுதான் வயிற்று வலியால் அவதிப்பட்டிருக்கிறார். மேலும், கடந்த சில நாள்களாக இயற்கை உபாதைகூட கழிக்க முடியாமல் அவதிப்பட்டிருக்கிறார் அந்த இளைஞர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
அறுவை சிகிச்சை
அறுவை சிகிச்சை

அவரை குணப்படுத்துவதில் பெரும் சவாலை சந்தித்தோம். இருப்பினும், அவருக்கு கவனமான சிகிச்சை அளித்தோம். இரண்டு மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின்புதான் அந்த பாட்டில் வெளியே எடுக்கப்பட்டது. அவரின் உணவு குழாயும் சீர்செய்யப்பட்டிருக்கிறது. வயிற்றில் பாட்டில் இருந்ததால் நோயாளியின் குடல் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அதை விரைவில் மற்றொரு அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்வோம்" எனத் தெரிவித்திருக்கிறார்கள்