Published:Updated:

தொடர்ந்து தலைமுடியை சாப்பிட்டுவந்த பெண்: வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட ஒன்றரை கிலோ கட்டி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
Patient at Hospital (Representational Image)
Patient at Hospital (Representational Image) ( Image by Parentingupstream from Pixabay )

தொடர்ந்து தலைமுடியை உண்ணும் பழக்கத்தை அந்தப் பெண் வழக்கமாக வைத்திருந்தார் எனவும், அதனாலேயே அவருக்கு வயிற்றில் இந்தக் கட்டி உருவானதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். அறுவை சிகிச்சைக்குப் பின் நோயாளியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கர்நாடகாவைச் சேர்ந்த பெண்ணின் வயிற்றில் இருந்து ஒன்றரை கிலோ முடிகளால் ஆன கட்டி நீக்கப்பட்டது.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடும் வயிற்றுவலியால் ரொம்ப காலமாக பாதிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த வாரம் மடிகேரியில் உள்ள குடகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

Surgery (Representational Image)
Surgery (Representational Image)
Photo by JAFAR AHMED on Unsplash
ஒரு வருடமாக மனச்சோர்வு; தலைமுடியைப் பிய்த்து சாப்பிட்ட மாணவி; வயிற்றில் உருவான 1.5 கிலோ கட்டி!

சிகிச்சையின் போது மருத்துவர்கள் அந்தப் பெண்மணியின் வயிற்றில் ஸ்கேன் செய்து பார்த்த போது கட்டி இருக்கிறது என்றும், அதனை அகற்ற வேண்டும் எனவும் முடிவு செய்துள்ளனர்.

சமீபத்தில் அவருக்கு ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடந்த அறுவை சிகிச்சையில் அவரின் வயிற்றில் இருந்த முடிகள் சேர்ந்த கட்டி அகற்றப்பட்டது. அந்தக் கட்டி ஒன்றரை கிலோ அளவு எடையில் இருந்ததாக மருத்துவக் குழுவினர் கூறியுள்ளனர்.

Surgery (Representational Image)
Surgery (Representational Image)
Image by Debora Alves from Pixabay
பெண் வயிற்றில் சத்தமின்றி வளர்ந்த 22 கிலோ கட்டி; நீக்கிய அரசு மருத்துவர்கள்; கட்டிக்கு காரணம் என்ன?

டாக்டர் அஜித் குமார் தலைமையிலான குழு, பெண்ணின் வயிற்றிலிருந்த கட்டியை அகற்றியது. தொடர்ந்து தலைமுடியை உண்ணும் பழக்கத்தை அந்தப் பெண் வழக்கமாக வைத்திருந்தார் எனவும், அதனாலேயே அவருக்கு வயிற்றில் இந்தக் கட்டி உருவானதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். அறுவை சிகிச்சைக்குப் பின் நோயாளியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு