Published:Updated:

"அமித் ஷா அறிவிப்பால் கவரப்பட்டேன்!'' - `ஸ்ரீஹரி' போட்டு இந்தியில் மருந்து சீட்டு எழுதும் டாக்டர்

ம.பி முதல்வர்

மத்தியப் பிரதேசத்தில் டாக்டர்கள் இந்தியில் மருந்து சீட்டுக்களை எழுதிக்கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

"அமித் ஷா அறிவிப்பால் கவரப்பட்டேன்!'' - `ஸ்ரீஹரி' போட்டு இந்தியில் மருந்து சீட்டு எழுதும் டாக்டர்

மத்தியப் பிரதேசத்தில் டாக்டர்கள் இந்தியில் மருந்து சீட்டுக்களை எழுதிக்கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

Published:Updated:
ம.பி முதல்வர்

சமீபத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா மத்தியப் பிரதேசத்தில் மருத்துவக் கல்வியை இந்தியில் கற்றுக்கொடுக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதோடு இந்தியில் மொழி பெயர்க்கப்பட்ட 3 மருத்துவ படிப்புகளுக்கான புத்தகங்களையும் வெளியிட்டார். மத்தியப் பிரதேசத்தில் இந்தியில் மருத்துவக் கல்வி கற்றுக்கொடுப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பு தெரிவித்திருந்தார். இந்தத் திட்டத்தால் லட்சக்கணக்கான மாணவர்கள் மருத்துவக் கல்வியை தங்களது தாய் மொழியில் கற்றுக்கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த விழாவில் கலந்துகொண்ட மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌகான், டாக்டர்கள் மருந்து சீட்டுகளையும் `ஸ்ரீஹரி' என்ற வார்த்தையுடன் எழுதிக்கொடுக்கலாம் என்று கூறினார்.

இந்த நிலையில், அமித் ஷா தொடங்கி வைத்த திட்டத்தால் கவரப்பட்ட மத்தியப் பிரதேச டாக்டர் ஒருவர், நோயாளிக்கு இந்தியில் மருந்து சீட்டு எழுதிக்கொடுத்திருத்திருக்கிறார். நோயாளிக்கு என்ன பிரச்னை என்பதை தெளிவாக எழுதி அதற்கான மருந்தையும் இந்தியில் எழுதிக்கொடுத்திருக்கிறார். அமித் ஷா சொன்னதை மட்டும் கேட்காமல் முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌகான் சொன்னபடி மருந்து சீட்டில் `ஸ்ரீஹரி' எனத் தொடங்கி எழுதியிருக்கிறார்.

சிவ்ராஜ் சிங் சௌகான்
சிவ்ராஜ் சிங் சௌகான்

இது குறித்து மத்தியப் பிரதேச மாநிலம், சத்னாவைச் சேர்ந்த டாக்டர் சர்வேஷ் சிங், ``மத்திய அமைச்சர் அமித் ஷாவின் நிகழ்ச்சியால் கவரப்பட்டு நோயாளிகளுக்கு மருந்து சீட்டை இந்தியில் எழுதிக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறேன். அரசு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள் நோயாளிகளுக்கு மருந்து சீட்டை இந்தியில் எழுதிக்கொடுக்க முன் வரவேண்டும். அதற்கு முன்மாதிரியாகத்தான் நானே இந்தியில் எழுதிக்கொடுக்கும் பணியை தொடங்கியிருக்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.