Published:Updated:

`கைது செய்யக்கூடாது, பாதுகாப்பு அளிக்க வேண்டும்!'- சாதி மறுப்பு திருமண வழக்கில் கடுகடுத்த நீதிமன்றம்

நீதிமன்றம்
நீதிமன்றம்

திருமணம் செய்ததிலிருந்தே பெண் வீட்டைச் சேர்ந்தவர்கள் தம்பதியினருக்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்துள்ளனர்.

ஜெய்ப்பூரில், இருவேறு சமூகங்களைச் சேர்ந்த காதலர்கள் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இதில் ஒருவர் மருத்துவராகவும் மற்றொருவர் பொறியியலாளராகவும் பணியாற்றி வருகிறார். திருமணம் செய்ததில் இருந்தே பெண் வீட்டைச் சேர்ந்தவர்கள் தம்பதியினருக்குத் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், தன்னுடைய மனைவியின் வீட்டைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கு மிரட்டல் விடுவதாக நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என தம்பதியினரின் வழக்கறிஞரான மன்னன் மிஸ்ரா, நீதிமன்றத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனடிப்படையில், ஹோலி பண்டிகை தொடர்பான விடுமுறை நாள்களில் இருந்த நீதிமன்றம், இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு வழக்கை உடனடியாக விசாரித்தது.

நீதிமன்றம்
நீதிமன்றம்

நீதிபதிகள் அசோக் பூஷன் மற்றும் சூர்ய காந்த் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்தனர். கைது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்றும் தேவைப்பட்டால் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கடந்த 2018-ம் ஆண்டு வெவ்வேறு பிரிவைச் சேர்ந்த காதலர்கள் திருமணம் செய்தபின் தாக்கப்பட்டது தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ``திருமண வயதை அடைந்த ஆண், பெண் இருவரும் ஒருவருக்கொருவர் சம்மதத்தோடு திருமணம் செய்துகொள்ளும் பட்சத்தில் அவர்கள் எந்த மதம், சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களது உறவினர்கள் அந்த திருமணத்தில் தலையிடக் கூடாது" எனக் கூறியிருந்ததும் கவனிக்கத்தக்கது.

Credits : Ndtv

அறை எண் 306-ல் மாருதி ராவ்வின் உடல்... இந்தியாவை அதிரவைத்த ஆணவக்கொலை; தொழிலதிபர் தற்கொலை!
அடுத்த கட்டுரைக்கு