Published:Updated:

கொரோனா :`யாரும் பெங்களூருவை விட்டுப் போகாதீங்க!’ - மக்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்

பெங்களூரு
பெங்களூரு ( Image by FindingSR from Pixabay )

பெங்களூருவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அங்கு வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல தொடங்கியுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பரவலின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக மும்பை, டெல்லி, சென்னை போன்ற பெரிய நகரங்களில் வைரஸ் பரவல் உச்சமடைந்துள்ளது. இந்த வரிசையில் பெங்களூரு மட்டும் தப்பிப் பிழைத்து அங்கு பரவல் கட்டுக்குள் இருந்தது. இதற்கிடையில் சமீபத்தில் அங்கு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. முன்னதாக நாள் ஒன்றுக்கு நூற்றுக்கணக்கில் பதிவான பாசிடிவ் கேஸ்கள் தற்போது ஆயிரக்கணக்கில் பதிவாகத் தொடங்கியுள்ளன.

கொரோனா வார்டு
கொரோனா வார்டு
மாதிரி புகைப்படம்

இதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த சனிக்கிழமை இரவு 8 மணி முதல் திங்கள் கிழமை (இன்று) காலை 5 மணி வரை முழுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மிகவும் அத்தியாவசியமான தேவைகள் தவிர வேறு எதற்கும் அனுமதி வழங்கவில்லை. சாலையில் வாகனங்கள் இயங்க முற்றிலும் தடைவிதிக்கப்பட்டது. இந்த நிலையில் தான் கடந்த சனிக்கிழமை பெங்களூருவில் வசிக்கும் பலநூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களை நோக்கிச் சென்றுள்ளனர்.

கொரோனா:`பயணிகள் நிழற்குடையில் 3 மணி நேரம் கிடந்த உடல்!’ - கர்நாடகா அவலம்

பெங்களூருவில் அதிகரித்து வரும் கொரோனா பயத்தினாலும் தொடர்ந்து பிறப்பிக்கப்பட்டு வரும் முழுமையான ஊரடங்கால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் என்ற அச்சத்திலும் நகரத்தில் வசிக்கும் மக்கள் தங்கள் ஊர்களுக்குக் கிளம்பியுள்ளனர். பெங்களூருவிலிருந்து வெளியில் செல்லும் மக்களால் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரவும் அச்சம் இருப்பதால் மக்கள் யாரும் பெங்களூருவை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என அரசு தரப்பிலிருந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் பசவராஜ் பொம்மை
அமைச்சர் பசவராஜ் பொம்மை

இது தொடர்பாகப் பேசியுள்ள கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, ‘இன்னொரு ஊரடங்கு பயத்தினால் பெங்களூருவில் வசிக்கும் நிறைய மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல முயல்வதை நாங்கள் பார்க்கிறோம். இங்கு மீண்டும் லாக்டௌன் அமல்படுத்தப்படாது என முதல்வர் ஏற்கனவே தெளிவாகத் தெரிவித்துவிட்டார். எனவே மக்கள் யாரும் பெங்களூருவை விட்டு வெளியில் செல்ல வேண்டாம். இந்த நேரத்தில் நீங்கள் இடம் பெயர்வது மாநிலத்தின் பாதுகாப்புக்குத் தீங்கு விளைவிக்கும். மக்கள் அனைவரும் தற்போது இருக்கிற அதே இடத்திலேயே இருந்து தங்களது வேலைகளைத் தொடர்ந்து செய்துகொண்டிருங்கள்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா: `தாமதமான ஆம்புலன்ஸ்; சாலையில் விழுந்து உயிரிழந்த முதியவர்!’ -பெங்களூரு அதிர்ச்சி
அடுத்த கட்டுரைக்கு