Published:Updated:

கூகுளில் இதையெல்லாம் தேடாதீங்க... மீறினால் சிறை!

கூகுளில் இதையெல்லாம் தேடாதீங்க!

இந்த நிறுவனங்களால் நாம் தற்போது தேடுவது மட்டுமல்லாமல் ஏற்கெனவே தேடியதையும், சேமித்து வைத்திருப்பதைக்கூட கண்காணிக்க முடியும். நமது search history-ஐ அழித்துவிட்டால்கூட, இவர்களால் நாம் தேடியதை மற்றும் சேமித்ததைப் பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுளில் இதையெல்லாம் தேடாதீங்க... மீறினால் சிறை!

இந்த நிறுவனங்களால் நாம் தற்போது தேடுவது மட்டுமல்லாமல் ஏற்கெனவே தேடியதையும், சேமித்து வைத்திருப்பதைக்கூட கண்காணிக்க முடியும். நமது search history-ஐ அழித்துவிட்டால்கூட, இவர்களால் நாம் தேடியதை மற்றும் சேமித்ததைப் பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Published:Updated:
கூகுளில் இதையெல்லாம் தேடாதீங்க!

இந்த இணைய காலகட்டத்தில் கூகுள் மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. அடுத்த வாரம் என்ன படம் ரிலீஸ் தொடங்கி அரசு வேலைகளுக்கு மாடல் வினாதாள் வரை தேடுவதற்கு நாம் கூகுளைத்தான் பயன்படுத்துகிறோம். இன்னும் ஒருபடி மேலே போய், சிலர் கூகுளை தங்களது பர்சனல் டாக்டர் ஆகக்கூட பயன்படுத்துகிறார்கள்.

என்ன படம் ரிலீஸ் தொடங்கி மாடல் வினாதாள் வரை...
என்ன படம் ரிலீஸ் தொடங்கி மாடல் வினாதாள் வரை...

அமாவாசை அன்று நிலவு தெரியுமா? அமீபாவுக்கு கால்கள் உண்டா? எனப் பல விஷயங்களைப் பற்றி கூகுளில் தேடி வருகிறோம். ஆனால், இந்தியாவில் சில விஷயங்களை கூகுளில் தேடக் கூடாது என்பது உங்களுக்குத் தெரியுமா? அதைத் தேடினால் சிறைத்தண்டனை உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா?

சரி... சரி... பதறாதீர்கள்... என்ன வலைதளத்தை இந்தியாவில் தேடக்கூடாது என்று தெரிந்துகொள்வோம். வாங்க...

குழந்தைகள் ஆபாச படம்

இந்தியாவில் குழந்தைகளின் ஆபாச படங்களைத் தேடினாலோ, பார்த்தாலோ, போக்ஸோ சட்டத்தின் 14-வது பிரிவின் கீழ் 5 - 7 வருட சிறைத்தண்டனை வழங்கப்படும்.

கூகுளில் இதையெல்லாம் தேடாதீங்க... மீறினால் சிறை!
Parents

குண்டு தயாரிப்பு

குண்டு தயாரிப்பது எப்படி? என்று நீங்கள் கூகுளில் தேடினால், உங்களது IP முகவரி நேரடியாக சைபர் க்ரைம் செல்லுக்கு சென்றுவிடும்.

பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தைப் பகிருதல்

பாலியல் தொல்லை உள்ளிட்ட தொல்லைகள் அல்லது வன்முறையால் பாதிக்கபட்டவர்களின் அடையாளம் அல்லது ரகசியமாகக் காக்கப்படும் குற்றம் பற்றிய தகவல்கள் ஆகிவற்றைப் பகிர்ந்தாலோ, கசியவிட்டாலோ சிறைத்தண்டனை கிடைக்கும்.

படத்திருட்டு

ஒளிப்பதிவு சட்டம் 1952-ன்படி படத்திருட்டில் ஈடுபட்டால் 10 லட்சம் அபராதமும், மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்.

கருக்கலைப்பு

கருக்கலைப்பு பற்றி நீங்கள் கூகுளில் தேடுவது சட்டப்படி குற்றமாகும். இதற்கு சிறைத்தண்டனை உண்டு.

கூகுளில் இதையெல்லாம் தேடாதீங்க... மீறினால் சிறை!
flaticon

தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 மற்றும் தகவல் தொழில்நுட்ப செயல்முறை மற்றும் தகவல் இடைமறிப்பு, கண்காணிப்பு மற்றும் மறைகுறியாக்கத்துக்கான பாதுகாப்பு விதி 4-கின்படி,

  • புலனாய்வுத் துறை (Intelligence Bureau)

  • போதைப் பொருள் தடுப்புப் பிரிவு (Narcotics Control Bureau)

  • அமலாக்கத்துறை (Enforcement Directorate)

  • மத்திய நேரடி வரிகள் வாரியம் (Central Board of Direct Taxes)

  • வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (Directorate of Revenue Intelligence)

  • மத்தியப் புலனாய்வுத் துறை (Central Bureau of Investigation)

  • தேசிய புலனாய்வு முகமை (National Investigation Agency Cabinet Secretariat (RAW))

  • சிக்னல் நுண்ணறிவு இயக்குநரகம் (ஜம்மு & காஷ்மீர், வடகிழக்கு மற்றும் அஸ்ஸாமின் சேவைப் பகுதிகளுக்கு மட்டும்) (Directorate of Signal Intelligence (For service areas of Jammu & Kashmir, North-East and Assam only)

  • போலீஸ் கமிஷனர்

ஆகிய 10 நிறுவனங்களுக்கு நமது கூகுள் தேடலை கண்காணிக்கும் அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது.

இந்த நிறுவனங்களால் நாம் தற்போது தேடுவது மட்டுமல்லாமல் ஏற்கெனவே தேடியதையும், சேமித்து வைத்திருப்பதைக்கூட கண்காணிக்க முடியும். நமது search history-ஐ அழித்துவிட்டால் கூட, இவர்களால் நாம் தேடியதை மற்றும் சேமித்ததைப் பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறை
சிறை

தற்போது உள்ள நடைமுறைப்படி, சட்டத்துக்குப் புறம்பான விஷயங்களைத் தேடுபவரது சாதனங்களை இந்த நிறுவனங்களே பறிமுதல் செய்யலாம். இந்த நடைமுறைக்கு ஒத்துழைப்பு கொடுக்காத நபர்களைக் கைது செய்து சிறையிலும் அடைக்கலாம்.