Published:Updated:

` `மை லார்ட்',`யுவர் லார்ட்ஷிப்'.. இதெல்லாம் வேண்டாமே..!' - நீதிபதி முரளிதரின் கோரிக்கை

நீதிபதி முரளிதர்
நீதிபதி முரளிதர்

``நீதிபதி.முரளிதர், பார் கவுன்சில் உறுப்பினர்கள் தன்னை `மை லார்ட்' மற்றும் `யுவர் லார்ட்ஷிப்' என்று குறிப்பிட்டு உரையாடுவதைத் தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

டெல்லியில், குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பவர்களுக்கும் இடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டது. பின்னர், இந்த மோதல் மிகப்பெரிய கலவரமாக மாறியது. கலவரம் தொடர்பாக சமூக ஆர்வலர் ஹர்ஷ் மந்தர் என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி முரளிதர், தலைநகர் டெல்லியில் வெடித்த வன்முறையைக் கட்டுப்படுத்த போலீஸ் தகுந்த நடவடிக்கை எடுக்காதது குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பினார்.

டெல்லி வன்முறை
டெல்லி வன்முறை

``வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பேசிய பாரதிய ஜனதா கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?" என்று கோபமாகக் கேட்டார். இதையடுத்து, அன்றைய தினம் இரவே நீதிபதி முரளிதர், டெல்லி உயர்நீதிமன்றத்திலிருந்து பஞ்சாப்- ஹரியானா மாநில உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். இந்தச் செய்தி கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானதும் நீதிபதி எஸ். முரளிதர் பேசுபொருளாக இருந்ததும் கவனிக்கத்தக்கது.

`தொடக்கம் தந்த சென்னை ; குரலற்றவர்களின் குரல்!’ - நீதியரசர் முரளிதரின் பின்னணி

இந்த நிலையில், பஞ்சாப் - ஹரியானா நீதிமன்றத்தில் கடந்த மார்ச் 6-ம் தேதி நீதிபதியாகப் பதவியேற்றார். பின்னர் வழக்கறிஞர்கள் தன்னிடம் உரையாற்றும்போது `மை லார்ட்' மற்றும் `யுவர் லார்ட்ஷிப்' போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்பாக வழங்கப்பட்ட பட்டியலில், ``நீதிபதி முரளிதர், பார் கவுன்சில் உறுப்பினர்கள் தன்னை `மை லார்ட்' மற்றும் `யுவர் லார்ட்ஷிப்' என்று குறிப்பிட்டு உரையாடுவதை தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

சண்டிகரில் உள்ள உயர்நீதிமன்றம் பார் கவுன்சிலும் நீதிபதிகளை "சார்" அல்லது "யுவர் ஹானர்" போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி அழைக்கலாமே என வழக்கறிஞர்களை சில ஆண்டுகளுக்கு முன்பு கேட்டுக் கொண்டது. இருப்பினும் பல வழக்கறிஞர்கள் தொடர்ந்து "யுவர் லார்ட்ஷிப்" போன்ற சொற்களைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.

நீதிபதி முரளிதர்
நீதிபதி முரளிதர்

இதேபோல ராஜஸ்தான் உயர்நீதிமன்றமும் வழக்கறிஞர்களுக்குக் கடந்த ஆண்டு ஒரு அறிவுறுத்தலை வழங்கியது. அதில், ``அரசியலமைப்பில் உள்ள சமத்துவத்தைப் போற்றும் வகையில் உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்த நீதிபதிகள் அனைவரும் இணைந்து ஒரு முடிவை எடுத்துள்ளோம். அதனடிப்படையில், நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் பேசும்போது நீதிபதிகளை `மை லார்ட்' மற்றும் `யுவர் லார்ட்ஷிப்' போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி அழைக்க வேண்டாம் என வலியுறுத்தியிருந்தனர்.

`பா.ஜ.க தலைவர்கள் மீது எஃப்.ஐ.ஆர்; வன்முறையைக் கண்டித்த நீதிபதி!' - இடமாற்ற  சர்ச்சை #DelhiRiots
அடுத்த கட்டுரைக்கு