Published:Updated:

மே.வங்கம்: கலவரக்காரர்கள் பிடியில் சிக்கிய போலீஸ் அதிகாரி! - காப்பாற்றியவருக்குக் குவியும் பாராட்டு

வன்முறை - கலவரம்

கலவரக்காரர்களிடம் சிக்கிய போலீஸ் அதிகாரியை பத்திரமாக மீட்டு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த இளைஞருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

மே.வங்கம்: கலவரக்காரர்கள் பிடியில் சிக்கிய போலீஸ் அதிகாரி! - காப்பாற்றியவருக்குக் குவியும் பாராட்டு

கலவரக்காரர்களிடம் சிக்கிய போலீஸ் அதிகாரியை பத்திரமாக மீட்டு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த இளைஞருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Published:Updated:
வன்முறை - கலவரம்

மேற்கு வங்கத்தில், ஊழல் குற்றச்சாட்டில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் விசாரிக்கப்பட்டதற்குப் பிறகு, கடந்த 14-ம் தேதி கொல்கத்தாவில், பா.ஜ.க ஊழலுக்கு எதிரான போராட்டம் என்ற அணிவகுப்புக்கு திட்டமிட்டது. திரளான அளவில் அதில் கட்சியினர் கலந்துகொள்ள பா.ஜ.க ஏழு ரயில்களை வாடகைக்கு எடுத்திருந்தது.

இந்த நிலையில், அந்த பேரணியின்போது காவல்துறைக்கும் பா.ஜ.க தொண்டர்களுக்கு மத்தியில் கலவரம் வெடித்ததில் பல காவல்துறை அதிகாரிகளும், பா.ஜ.க தொண்டர்களும் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. பா.ஜ.க தொண்டர்கள் காவல்துறையினர்மீது கற்களை வீசி, கும்பல் தாக்குதல் நடத்தியதில் பல காவல்துறையினரின் பாதுகாப்புக் கவசங்கள் இரண்டாக உடைந்ததாகச் சொல்லப்படுகிறது.

 வன்முறை கலவரம்
வன்முறை கலவரம்

இந்தத் தாக்குதலில் ஏ.சி.பி டெப்ஜித் சாட்டர்ஜி என்ற அதிகாரியின் கை உடைக்கப்பட்டிருக்கிறது. கடுமையாக தாக்கப்பட்ட டெப்ஜித் சாட்டர்ஜியின் உயிரைக் காப்பாற்றிய முகம்மது ஷாஹித், பல்வேறு தரப்பு மக்களால் பாராட்டப்படுகிறார். இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது, ``கொல்கத்தாவில் தேங்காய் கடை வைத்திருக்கிறேன். மூன்று நாள்களுக்கு முன்பு, எங்கும் பதற்றம் நிலவியது, அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. ஏ.சி.பி டெப்ஜித் சாட்டர்ஜி அதிகாரியும் மற்ற மூன்று காவலர்களும் எம்.ஜி சாலையில் இருந்து வாகனத்தில் வந்து எனது கடை முன்பு நிறுத்தினார்கள்.

திடீரென, பேரணியாளர்கள் காவல்துறையினரை அடிக்கத் தொடங்கினர், ஏ.சி.பி டெப்ஜித் சாட்டர்ஜி அதிகாரி தனியாகப் பிடிபட்டார், சில போராட்டக்காரர்கள் அவரை இரக்கமின்றி தாக்கினர். ஒருகட்டத்தில்,ஏ.சி.பி போராட்டக்காரர்களின் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டார், அந்த நேரத்தில் நான், தாக்கும் கும்பலிடமிருந்து அவரை இழுத்துச் சென்றேன். அந்த அதிகாரியை முதலில் எனது கடைக்கு பின்னால் உள்ள ஒரு கடைக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து சுந்தரிப்பட்டி மசூதிக்கு அழைத்துச் சென்றேன். மற்ற கடைக்காரர்கள் அவருக்கு உதவினார்கள். நாங்கள் அவரின் காலிலிருந்து கண்ணாடி துண்டுகளை எடுத்தோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
காவல்துறை
காவல்துறை

அவர் ஹெல்மெட் அணிந்திருந்தார், இல்லையென்றால் அவர் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியாது. போலீஸார் என்னை அழைத்தபோது நான் முதலில் பயந்தேன், ஆனால் என்னுடைய முயற்சிகள் பாராட்டப்பட்ட பிறகு நிம்மதி பெருமூச்சு விட்டேன். நான் தான் காவலரை காப்பாற்றினேன் எனத் தெரிந்தால் தாக்கப்படுவேனோ என அச்சமாக இருக்கிறது" என்று சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளாத முகமது ஷாஹித் தெரிவித்திருக்கிறார்.

முகமது ஷாஹிதின் இந்த செயலுக்கு காவல்துறை மற்றும் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.