Published:Updated:

வலிப்பு வந்து மயங்கிய டிரைவர்; 25 கி.மீ பஸ்ஸை இயக்கி 20 பயணிகளைக் காப்பாற்றிய பெண்!

பஸ் ஓட்டும் யோகிதா

``எனக்கு கார் ஓட்டி நல்ல அனுபவம் இருக்கிறது. ஆனால் பஸ், கனரக வாகனத்தை எல்லாம் ஓட்டியதில்லை. கார் கியர் எளிமையாக இருக்கும். ஆனால் பஸ் கியர் கடினமாக இருந்தது. பஸ்ஸை இயக்கியவுடன் முதல் கியர் போடவே மிகவும் போராடினேன். முதல் கியர் போட்ட நேரத்தில் பஸ் பின்னோக்கிச் செல்ல ஆரம்பித்தது."

வலிப்பு வந்து மயங்கிய டிரைவர்; 25 கி.மீ பஸ்ஸை இயக்கி 20 பயணிகளைக் காப்பாற்றிய பெண்!

``எனக்கு கார் ஓட்டி நல்ல அனுபவம் இருக்கிறது. ஆனால் பஸ், கனரக வாகனத்தை எல்லாம் ஓட்டியதில்லை. கார் கியர் எளிமையாக இருக்கும். ஆனால் பஸ் கியர் கடினமாக இருந்தது. பஸ்ஸை இயக்கியவுடன் முதல் கியர் போடவே மிகவும் போராடினேன். முதல் கியர் போட்ட நேரத்தில் பஸ் பின்னோக்கிச் செல்ல ஆரம்பித்தது."

Published:Updated:
பஸ் ஓட்டும் யோகிதா

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகில் உள்ள வகோலி என்ற இடத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர், அங்குள்ள மொராச்சி சிஞ்ச்சோலி என்ற இடத்திற்கு மினி பஸ்ஸில் ஒரு நாள் பிக்னிக் சென்றனர். மாலை 5 மணிக்கு அனைவரும் வீடு திரும்ப பஸ்ஸில் ஏறினர். பஸ் சிறிது தூரம் சென்ற நிலையில் அதனை ஓட்டிய டிரைவருக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டது. கண்பார்வை மங்கி மயக்கம் வருவது போன்று இருப்பதாகவும், தன்னால் எதையும் பார்க்க முடியவில்லை என்றும் கூறிய டிரைவர் வண்டியை சரியாக ஓட்ட முடியாமல் திணறினார். இதனால் பஸ்ஸில் இருந்த பயணிகள் அனைவரும் அச்சத்தில் என்ன செய்து என்று தெரியாமல் கூச்சலிட்டனர். சில பெண்கள் அழ ஆரம்பித்தனர்.

அந்தப் பதற்றமான சூழ்நிலையில், டிரைவர் சீட்டிற்கு பின்புறம் இருந்த சீட்டில் அமர்ந்திருந்த யோகிதா (42) என்ற பெண், உடனடியாக விரைந்து செயல்பட்டு டிரைவரிடம் சென்று, என்னவானது என்று கேட்டார். தன்னால் பஸ்ஸை ஓட்ட முடியவில்லை என்று சொன்னபடியே டிரைவர் மயங்கி விழுந்தார்.

பஸ்சை இயக்கும் யோகிதா
பஸ்சை இயக்கும் யோகிதா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உடனே யோகிதா ஸ்டியரிங்கை பிடித்துக்கொண்டார். அந்நேரம் மற்ற இரு பெண்கள் டிரைவரை அருகில் உள்ள இருக்கைக்கு மாற்றினர். பஸ்ஸில் இருந்தவர்கள் அனைவரும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு, என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் இருந்தனர். யோகிதா, தனக்கு கார் ஓட்டத் தெரியும் என்றும், தானே பஸ்ஸை ஓட்டுவதாகவும் தெரிவித்தார். மற்ற பயணிகளும் வேறு வழியில்லாமல் பஸ்ஸை யோகிதா ஓட்டும்படி கேட்டுக்கொண்டனர்.

யோகிதா வாழ்க்கையில் முதன்முறையாக பஸ்ஸை, அதுவும் குண்டும் குழியுமான சாலையில் இயக்க ஆரம்பித்தார். பயணிகள் அனைவரும் தொடர்ந்து அச்சத்திலேயே இருந்தனர். மாலை நேரம் என்பதால் இருட்டாகிவிட்டது. இரவு நேரத்தில் கார் ஓட்டியே அனுபவம் இல்லாத நிலையிலும், யோகிதா பஸ்ஸை நம்பிக்கையுடன் ஓட்டினார். 25 கிலோ மீட்டர் தூரம் வரை பஸ்ஸை ஓட்டி, டிரைவருக்கு முதலுதவி கிடைக்கச் செய்து, 20 பயணிகளின் உயிரை காப்பாற்றினார். டிரைவருக்கு வலிப்பு வந்திருந்தது பின்னர் தெரிய வந்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து யோகிதாவிடம் கேட்கப்பட்டபோது, ``எனக்கு கார் ஓட்டி நல்ல அனுபவம் இருக்கிறது. ஆனால் பஸ், கனரக வாகனத்தை எல்லாம் ஓட்டியதில்லை. கார் கியர் எளிமையாக இருக்கும். ஆனால் பஸ் கியர் கடினமாக இருந்தது. பஸ்ஸை இயக்கியவுடன் முதல் கியர் போடவே மிகவும் போராடினேன். முதல் கியர் போட்ட நேரத்தில் பஸ் பின்னோக்கிச் செல்ல ஆரம்பித்தது. இது போன்று மூன்று முறை நடந்தது. உடனே, காரில் கியரை இடது புறம் தள்ளுவது போன்று செய்யாமல் வலது புறம் தள்ளியபோது பஸ் முன்னோக்கிச் செல்ல ஆரம்பித்தது.

பஸ் செல்ல ஆரம்பித்த பிறகு எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. சாலையில் எந்த வாகனப் போக்குவரத்து நெருக்கடியும் இல்லை. எனது காரை ஓட்டுவது போன்று பஸ்ஸை ஓட்டிச் சென்றேன். மிதமான வேகத்தில் இயக்கினேன். பஸ்சை ஓட்டியபோது மற்ற பயணிகள் எனக்கு எந்தவித ஆலோசனையும் கூறவில்லை. எனக்கு ஏற்கெனவே பஸ் ஓட்ட தெரியும்போல என்று அவர்கள் நினைத்திருக்கலாம்.

பஸ் ஓட்டும் யோகிதா
பஸ் ஓட்டும் யோகிதா

பஸ் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. ஹார்ன்கூட அடிக்க இயலவில்லை. டிரைவரை முதலில் மருத்துவமனையில் சேர்த்தேன். எந்தப் பிரச்னையும் இல்லாமல் பஸ்ஸை ஓட்டிச் சென்றதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி'' என்று தெரிவித்தார்.

தன் மனைவியின் சமயோசித சாகசம் குறித்து யோகிதாவின் கணவர் தர்மேந்திரா கூறுகையில், ``என் மனைவிக்கு கார் நன்றாக ஓட்டத் தெரியும். ஆனால் பஸ் ஓட்டுவார் என்று நினைக்கவிலை'' என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மாற்றுத்திறனாளியான தர்மேந்திராவை யோகிதா காதல் திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

யோகிதா இப்போது இந்திய வைரல்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism