Published:Updated:

போலீஸ் எஸ்.ஐ-யை முத்தமிட்ட இளைஞர் - திருவிழாவில் நடந்த அத்துமீறல்!

தெலங்கானாவில் போலீஸ் அதிகாரியை இளைஞர் ஒருவர் முத்தமிட்ட சம்பவம் நடந்துள்ளது.

போலீஸ்
போலீஸ்

தெலங்கானாவில் ‘போனலு’ திருவிழா ஒவ்வொரு ஆடி மாதமும் கொண்டாடப்படுவது வழக்கம். காளி தேவிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தெலங்கானா மக்கள் இவ்விழாவினை கொண்டாடுகின்றனர். சனிக்கிழமை இரவு நடந்த திருவிழாவுக்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இளைஞர்கள் சாலையில் நடனமாடிக் கொண்டிருந்தனர்.

திருவிழாவில் அத்துமீறிய இளைஞர்
திருவிழாவில் அத்துமீறிய இளைஞர்

அப்போது காவல்பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரி மகேந்தரை இளைஞர் ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார். இதைச் சற்று எதிர்பாராத காவலர் அந்த இளைஞரை தள்ளிவிட்டார். அங்கிருந்து நகர்ந்து சென்ற இளைஞர் காவலருக்குப் பின்னால் நடனமாடிக்கொண்டிருந்தார். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

காவல் துணை ஆய்வாளர் மகேந்தர், வித்யா நகர்ப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக மகேந்தர் தனது உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் அந்த இளைஞரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காவல் அதிகாரியிடம் அத்துமீறி நடந்துகொண்ட இளைஞர் பெயர் பவுடல் பானு என்பதும் தெரியவந்துள்ளது. தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். அந்த இளைஞரை கைது செய்த தெலங்கானா காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.