Published:Updated:

சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞர்கள்! தடுத்த கர்நாடக வனவிலங்கு ஆர்வலர் கிரிஷ் மீது தாக்குதல்!

டி.வி.கிரிஷ் மீது தாக்குதல்
டி.வி.கிரிஷ் மீது தாக்குதல்

கர்நாடகாவின் புகழ்பெற்ற சூழலியல் செயற்பாட்டாளரான டி.வி.கிரிஷ், குடிகார கும்பலால் கடுமையாக தாக்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

கர்நாடகாவின் புகழ்பெற்ற சூழலியல் செயற்பாட்டாளரான டி.வி.கிரிஷ், குடிகார கும்பலால் கடுமையாகத் தாக்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. டி.வி.கிரிஷ் பயணித்த ஜீப்பை வழிமறித்த எட்டு பேர் கொண்ட கும்பல், அவரையும் அவரது நண்பரையும் சரமாரியாகத் தாக்கும் காட்சிகள் காண்போர் மனதை பதைபதைக்க வைக்கிறது.

கடந்த திங்கட்கிழமை, கிரிஷ் அவருடைய நண்பர் மற்றும் அவரது மகளுடன் சேர்ந்து கர்நாடகாவிலிருக்கும் சாந்தவேரிக்கு ஜீப்பில் சென்றனர். அப்போது, குடிபோதையில் இருந்த எட்டு இளைஞர்கள் அவர்களை சூழ்ந்துகொண்டனர். மேலும், கிரிரிஷின் நண்பருடைய மகளிடம் ஆபாசமாகப் பேசி, தவறாக நடக்கவும் முயற்சி செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கிரிஷும் அவரது நண்பரும் சிறுமியை மீட்டு, அவர்களின் இழிவான செயலைக்க் கண்டித்துள்ளனர். பின்னர், உடனடியாக ஜீப்பை எடுத்துக்கொண்டு அந்த இடத்தைவிட்டுக் கிளம்பினர்.

`ஒரே நாளில் 3 வழக்குகள்'- சகோதரிக்குப் பாலியல் தொல்லை; சிறுமிக்கு நிகழ்ந்த கொடூரம்; பகீர் பின்னணி!
டி.வி.கிரிஷ் தாக்கப்படும் காட்சி
டி.வி.கிரிஷ் தாக்கப்படும் காட்சி

ஆனாலும், அவர்கள் மூவரையும் விடாத அந்த கும்பல், தங்களின் பைக்கை எடுத்துகொண்டு ஜீப்பின் பின்னாலேயே விரட்டிச் சென்றுள்ளனர். ஒருகட்டத்தில் கிரிஷின் ஜீப்பை வழிமறித்துத் தடுத்து நிறுத்தியவர்கள், கிரிஷ் மற்றும் அவரது நண்பரை சரமாரியாகத் தாக்கத்தொடங்கினர். இந்த சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், பாதிக்கப்பட்ட மூவரையும் அந்த கும்பலிடமிருந்து போராடி மீட்டுள்ளனர்.

ஜீப்பை வழிமறித்த கும்பல்
ஜீப்பை வழிமறித்த கும்பல்

தற்போது, டி.வி.கிரிஷ் மற்றும் அவரது நண்பர் மீது தாக்குதல் நடத்திய எட்டுபேர் கொண்ட கும்பலை, சிக்மகளூர் போலீஸார் கைது செய்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு